• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • பேத்தி படிப்புக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவருக்கு கிடைத்த நன்கொடை

பேத்தி படிப்புக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவருக்கு கிடைத்த நன்கொடை

தேஸ்ராஜ்

தேஸ்ராஜ்

எனது பேத்தி ஆசிரியராக வரும்நாள் தொலைவில் இல்லை என்றும், அந்த நாளில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்,

 • Share this:
  மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கார் என்ற பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார் தேஸ்ராஜ் என்ற வயது 74 முதியவர். இவருக்கு 2 மகன்கள் இருந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சென்ற 40 வயது மதிக்கத்தக்க இவரின் மூத்த மகன் வீடு திரும்பவில்லை.

  இந்நிலையில், ஒரு வாரம் கழித்து மகனின் உடல் ஆட்டோ ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த தேஸ்ராஜ் கூறும்பொழுது, ‘அவனுடன் என்னுடைய ஒரு பாதி உயிர் போய்விட்டதைப் போல் உணர்கிறேன். ஆனாலும், பொறுப்புகளை சுமக்க வேண்டியதிருந்தது. அப்போது, அமர்ந்து அழுவதற்குக் கூட எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. அடுத்த நாளே ஆட்டோ ஓட்டும் வேலையைத் தொடர்ந்தேன்.’ என்று கூறியிருந்தார்.

  பின்னர், 2 ஆண்டுகள் கழித்து இவரரின் 2 ஆவது மகன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தனது மருமகள், 4 பேர குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு தேஸ்ராஜுக்கு வந்து விட்டது. 9ஆம் வகுப்பு படித்த பேத்தியின் கல்வி மற்றும் குடும்ப செலவுக்காக காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டவேண்டி இருந்தது.

  கிடைக்கும் வருவாயில் கல்வி செலவு போக, மிகக்குறைந்த தொகையை 7 பேர் கொண்ட குடும்பத்திற்கான செலவுக்கு மிஞ்சியது. பல நாட்கள் சாப்பிடுவதற்கு உணவு இன்றி தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தேஸ்ராஜின் பேத்தி 12 ஆம் வகுப்பு தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்ற மகிழச்சியில் அன்று நாள் முழுவதும் அதனை கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி செய்துள்ளார்.

  இதனைத் தொடர்ந்து, டெல்லிக்கு பி.எட். படிக்கச் செல்ல வேண்டும் என்ற பேத்தியின் விருப்பத்திற்காக தனது வீட்டை விற்றுள்ளார். பின்னர், அவரிரின் மனைவி, மருமகள் மற்றும் பேர குழந்தைகளை கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டில் விட்டுள்ளார்.

  மும்பையில் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிய அவர், ஆட்டோவிலேயே சாப்பிட்டு, தூங்கியுள்ளார். வகுப்பில் முதல் மாணவியாக பேத்தி வந்ததில் தனது அனைத்து வலிகளும் மறைந்து விட்டதாக பெருமை தெரிவித்தார். ‘எனது பேத்தி ஆசிரியராக வரும் நாள் தொலைவில் இல்லை என்றும், அந்த நாளில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி வழங்குவேன்’ எனவும் தெரிவித்தார்.

  இவரின் நிலை குறித்து, சமூக ஊடகங்கள் வழியே பலருக்கும் தெரியவந்து. பலரும் உதவி செய்ய முன்வந்தனர். முகநூல் பயனாளரான கஞ்சன் என்பவர் உதவியால் 200க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களால் 5.3 லட்சம் ரூபாய் சேர்ந்தது.

  அத்துடன், முதியவரின் பின்னணி பற்றி சமூக வலைதளங்களில் அறிந்து பலரும் நன்கொடை வழங்க முன்வந்தனர். இதனால், 24 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்தது.

  இதற்கான காசோலை அவரிடம் வழங்கப்பட்டது. இந்த பணத்தில் அவர் வீடு ஒன்றை கட்டி கொள்ளவும், தனது பேத்தியின் கல்வி செலவை ஈடு செய்யவும் பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  அந்த முதியவர், நன்கொடை பெற்ற விவரம் அறிந்த மக்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை சமூக ஊடகம் வழியே வெளிப்படுத்தி வருகின்றனர். பேர குழந்தைகளின் கல்விக்காக தனது வாழ்வின் அனைத்து துக்கங்களையும் மறந்து, அர்ப்பணிப்பு வாழ்க்கை வாழ்ந்த முதியவரின் முகத்தில் சோகம் மறைந்து நம்பிக்கை மிக்க புன்னகை வெளிப்படத் தொடங்கியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: