Home /News /national /

8 மாதங்களாக போலி போலீஸ் ஸ்டேசன் நடத்திய கும்பல்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்

8 மாதங்களாக போலி போலீஸ் ஸ்டேசன் நடத்திய கும்பல்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்

போலி போலீஸ் ஸ்டேஷன் நடத்திய கும்பல்..

போலி போலீஸ் ஸ்டேஷன் நடத்திய கும்பல்..

Crime news | போலீசுக்கேத் தேரியாமல் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bihar, India
    பீகாரில் நாட்டுத் துப்பாக்கியுடன் போலி போலீஸ் ஸ்டேஷன் நடத்தி வந்த கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். மாவட்டத்தின் தலைமையகத்தில் செயல்பட்டு வந்த இந்த போலீஸ் ஸ்டேஷனால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் போலி காவல்நிலையம் ஒன்று நீண்ட நாட்களாக செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மாவட்ட தலைமையகத்தில் செயல்பட்டு வந்த அந்த காவல்நிலையத்தில் சோதனை நடத்தச் சென்ற போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    அங்குள்ள விருந்தினர் மாளிகை அருகே ஒரு வாடகை வீட்டில் கடந்த 8 மாதங்களாக போலி காவல்நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. காவல்நிலையத்தில் சுமார் 5 பேர் அதிகாரிகள் உடையில் தங்களது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.அவர்களில் இன்ஸ்பெக்டர் உடையில் இருந்த பெண் தன்னை அனிதா தேவி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார்.

    ரமேஷ்குமார் என்பவர் எழுத்தராக பணியாற்றி வந்துள்ளார். கான்பூரைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவர் ஆவணங்களுடன் காவலர் சிருடையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த விசாரணையில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடம் விசாரித்த போது, தங்களை போலா யாதவ் என்பவர் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தியதாகக் கூறியுள்ளனர்.

    Read More : மும்பை கடற்கரையில் ஏகே47 துப்பாக்கி, வெடி பொருள்களுடன் இரு படகுகள் சிக்கின - பயங்கரவாதிகள் சதியா?


    அவர்கள் அனைவரும் இத்தனை நாட்களாக தங்களை நிஜ போலீஸ் என்றே நம்பி வந்துள்ளனர். இவர்களில் ஆகாஷ் என்பவர் தான் போலா யாதவிடம் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாகக் கூறியுள்ளார். இவர்களுக்கு தினந்தோறும் 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு பாட்னா ஸ்கார்ட் டீம் என பெயர் வைத்து, அரசு கட்டுமானங்கள் எங்கு கட்டப்பட்டாலும் அங்கு சென்று விசாரணை நடத்தி பணம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

    மேலும், சிறு வியாபாரிகள், கடை நடத்துபவர்கள் உள்ளிட்டோரிடமும் தினந்தோறும் பணம் பெற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.பிடிபட்டவர்கள் அனைவரும் போலா யாதவ் தான் தங்களது மூத்த அதிகாரி என நினைத்து கொண்டிருந்தனர். போலீசுக்கேத் தெரியாமல் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    5 பேரை கைது செய்த போலீசார், காவலர் சீருடைகள், பேட்ஜ்கள், நாட்டுத்துப்பாக்கி. ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கும்பலை உருவாக்கிய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Bihar, Crime News, India

    அடுத்த செய்தி