மேற்கு வங்கம், அசாமில் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு : தேர்தல் ஆணையருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்...

மாதிரி படம்

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 • Share this:
  மேற்குவங்கத்தில் முதற்கட்டமாக இன்று 30 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. புர்லியா, பாங்குரா, ஜார்கிராம், புர்பா உள்ளிட்ட 30 தொகுதிகளில் 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், 11 மணி நிலவரப்படி 24 புள்ளி 61 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனிடையே, சில வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அத்துமீறியதாக, பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரசார் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

  கந்தி தக்‌ஷன் மற்றும் கந்தி உத்தர் தொகுதிகளில், பதிவான வாக்குகள் தொடர்பாக முரண்பாடான அறிவிப்புகள் வெளியாகின. இத்தகைய அறிவிப்புகள், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாக, திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...தொகுதியில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவம்: திமுக வேட்பாளர்

  இதுதொடர்பாக புகார் அளிக்க, மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்திக்க அக்கட்சி பிரமுகர்கள் திட்டமிட்டுள்ளனர். அதேசமயம், தோல்வி பயம் காரணமாகவே, திரிணாமுல் காங்கிரசார் இத்தகயை குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக, பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: