Home /News /national /

உக்ரைனில் தவித்த 219 மாணவர்களுடன் நாடு திரும்பியது ஏர் இந்தியா விமானம்

உக்ரைனில் தவித்த 219 மாணவர்களுடன் நாடு திரும்பியது ஏர் இந்தியா விமானம்

இந்திய மாணவர்கள்

இந்திய மாணவர்கள்

Ukraine Russia war : உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் 219 பேர் ரூமேனியாவில் இருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

    உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் 219 பேர் ரூமேனியா விமான நிலையத்தில் இருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர். இவர்களுள் 4 பேர் தமிழக மாணவர்கள், 22 ஆந்திர மாணவர்கள் மற்றும் 19 கேரள மாணவர்கள் அடங்குவர் என தெரிய வந்துள்ளது. இந்த விமானம் இன்று மாலை மும்பை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



    இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாக 490 மாணவர்களை அழைத்துவர இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில், ஒன்று ஹங்கேரிக்கும் மற்றொன்று ரூமேனியாவிற்கும் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல நாடுகளின் எல்லைகளில் நிலமை மோசமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியர்களை மீட்க அண்டை நாடுகளுடன தூதரகம் தொடர்ந்து பேசி வருவதாகவும், உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இந்தியர்கள் அடுத்த உத்தரவு வரும் வரை அதே இடத்தில் இருக்கும்படியும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    Must Read : உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களை அழைத்துவர செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?- கனிமொழி விளக்கம்

    உரிய தகவல் தெரிவிக்காமல் பிற நாடுகளின் எல்லைகளுக்கு சென்ற, இந்தியர்களுக்கு உதவுவது சவாலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கியிருக்கவும், தேவையின்றி வெளியேற வேண்டாம் என்றும், இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள

    உதவி எண் : +91 9940256444 / +91 9600023645, 044-2851 5288
    மின்னஞ்சல் : nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com
    வலைதளம் : https://nrtamils.tn.gov.in
    Facebook : https://www.facebook.com/nrtchennai1038
    Twitter : @tamiliansNRT

    மத்திய வெளியுறவுத்துறை உதவி எண்கள்: 
    1800118797 (Toll free)
    +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905

    மின்னஞ்சல்: situationroom@mea.gov.in
    Published by:Suresh V
    First published:

    Tags: External Minister jaishankar, Russia - Ukraine, Tamil student

    அடுத்த செய்தி