• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மேற்கு வங்கத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு : நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களிக்கும் பொதுமக்கள்

மேற்கு வங்கத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு : நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களிக்கும் பொதுமக்கள்

வாக்காளர்கள்

வாக்காளர்கள்

மேற்கு வங்க மாநிலத்தில் 35 தொகுதிகளுக்கான 8ஆவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

  • Share this:
    மேற்கு வங்க மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளிலும் வாக்காளர்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து, ஆர்வத்துடன் நீண்ட விரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி நடந்த நிலையில், 8ஆவது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 29ஆம் தேதி) நடைபெறுகிறது.

    மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலில் 35 பெண்கள் உள்பட 283 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இன்று தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளிலும் மொத்தமாக 84,77,728 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், மொத்தம் உள்ள 11,860 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மாலை 6.30 வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெற்றுவரும் 35 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

    Must Read : பாகிஸ்தான் முதல் சவுதி அரேபியா வரை - கொரோனா 2-வது அலையில் சிக்கிய இந்தியாவுக்கு உதவும் 11 நாடுகள்!

    அன்றே வெற்றி நிலவரம் தெரியவரும். இந்நிலையில், நாடு முழுவதும் வேகமாகப் பதவி வரும்  கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: