கொரோனா அச்சத்திற்கு மத்தியில் மேற்குவங்கத்தில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு...!

வாக்கு பதிவு

ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 45 தொகுதிகளில், சுமார் 1.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கின்றனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா அச்சத்திற்கு மத்தியில் மேற்குவங்கத்தில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

  மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான், ஜல்பாய்குரி மற்றும் வடக்கு 24 பா்கானாஸ் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் மொத்தம் 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

  ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 45 தொகுதிகளில், சுமார் 1.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கின்றனர். 5 ஆம் கட்ட தேர்தலுக்காக 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.

  Also read... ‘தெலங்கானா முதல்வராவேன்’ - கட்சி தொடங்கும் முன்பே ஜெகன் தங்கை உறுதி!

  இதனிடையே, தொற்று பரவலை கருத்தில் கொண்டு மேற்குவங்கத்தில் அடுத்து நடைபெற உள்ள மூன்று கட்ட தேர்தலுக்கான பிரசார நேரத்தை தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது. அதன்படி, மாலை 7 முதல் காலை 10 மணி வரை அரசியல் கட்சியினர் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

  மேலும், தேர்தல் நடைபெறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே பிரசாரத்தை முடித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களுக்கு வரும் மக்களுக்கு முகக் கவசம், கிருமிநாசினி வழங்குவது அரசியல் கட்சிகளின் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: