Home /News /national /

என்னை அறிந்தால் படப் பாணியில் கடத்திய மகளை மீட்ட தந்தை - மும்பையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!

என்னை அறிந்தால் படப் பாணியில் கடத்திய மகளை மீட்ட தந்தை - மும்பையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மும்பையில் சினிமா பாணியில் கடத்தப்பட்ட மகளைத் தானே தேடி ஊர்விட்டு ஊர் சென்று தந்தை காப்பாற்றி மீட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    மும்பையில் கூலி தொழில் செய்யும் தந்தை ஒருவர் உத்தரப்பிரதேசத்திற்குக் கடத்தப்பட்ட தனது மகளை சினிமா பாணியில் தானே முயற்று காவல்துறை உதவியுடன் மீட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் உள்ள பாந்த்ரா என்ற பகுதியில் வசிக்கும் கூலித்தொழில் செய்யும் ஒருவரின் மகளை அதே பகுதியில் வேலை செய்யும் இளைஞன் கடத்தி சென்றுள்ளான். கடந்த 2ம் தேதி, இளம்பெண் வசிக்கும் அதே பகுதியில் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்யும் 24 வயது ஷாஹித் கான் என்ற இளைஞன் அந்த பெண்ணிடம் கடைவீதிக்குச் செல்லுவதற்குத் துணையாக வரும் படி கேட்டுள்ளான். இளம்பெண்ணும் அதை நம்பி வீட்டில் அம்மாவிடம் வெளியில் சென்று வருவதாகக் கூறி அந்த நபருடன் சென்றுள்ளார்.

    இந்த நிலையில் இளைஞன், அந்த பெண்ணை ஏமாற்றி குர்லா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருந்து சூரத் செல்லும் பேருந்தில் பெண்ணை கடத்தியுள்ளார். மேலும் அங்கு இருந்து டெல்லிக்கு ரயில் மூலம் கடத்தி கூட்டி சென்றுள்ளார்.

    வெளியில் சென்ற பெண் திரும்பி வராத நிலையில் அந்த பெண்ணின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறை புகாரைப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் தானாகவே மகளைக் கண்டு பிடிக்கத் தந்தை முயற்சி எடுத்துள்ளார்.

    அந்த பகுதியில் இருக்கும் பக்கத்து வீட்டார்கள் மற்றும் அப்பகுதி ஆட்களிடம் விசாரித்துள்ளார். அதில் கிடைத்த தகவலை வைத்துத் தொடர்ந்து தேடியுள்ளார். இறுதியில் அந்த இளைஞன் இருக்கும் இடத்தை தெரிந்துகொண்டு அந்த இளைஞனின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு, காவல்துறை மற்றும் கிராம மக்கள் உதவியுடன் தனது மகளைக் காப்பாற்றியுள்ளார். இந்த நிகழ்வு என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் சினிமாவில் வருவது போல் தந்தை மகளைக் காப்பாற்றும் பாணியில் அமைத்துள்ளது.

    Also Read : கடலில் மூழ்குபவரைக் காப்பாற்ற ரோபோ படகு - விசாகப்பட்டினம் மாநகராட்சி அசத்தல்

    அந்த பெண்ணை போதைக்கு உள்ளாகி, இளைஞன் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். மேலும் அந்த இளைஞன் மேல் போக்சோ வழக்குப் போடும்படி வலியுறுத்தி உள்ளார்.

    இந்த சம்பவம் நிர்மல் நகர் காவல் அலுவலகத்தில் பிரிவு 363 ஆட்கடத்தல் வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பொறுத்துத் தேவைப்படும் குற்றப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Crime News, Kidnapping Case, Mumbai

    அடுத்த செய்தி