சூயஸ் கால்வாயை முடக்கிய எவர்கிவ்வன் கப்பலில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள்!

சூயஸ் கால்வாயை முடக்கிய எவர்கிவ்வன் கப்பலில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள்!

எவர்கிவ்வன் சரக்கு கப்பல்

உலகின் பிஸியான நீர்வழி வர்த்தக வழித்தடமான சூயஸ் கால்வாயை 4 நாட்களாக வழிமறித்துக்கொண்டிருக்கும் எவர்கிவ்வன் கப்பலில் பணிபுரிந்து வரும் சிப்பந்திகள் அனைவரும் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.

  • Share this:
ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக சூயஸ் கால்வாய் உள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட 193 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றாகும். இந்த நீர்வழிப்பாதையில் சீனாவில் இருந்து நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களுடன் நெதர்லாந்து நோக்கி பயணித்த எவர்கிவ்வன் (Evergiven) என்ற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதியபடி கடந்த செவ்வாய்கிழமையன்று சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான இந்த எவர்கிவ்வன் சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயை மறித்து நிற்பதால் அதன் பின்னால் சுமார் 150 கப்பல்கள் வரை அணிவகுத்து நிற்கிறதாம். இந்த கப்பலை கூடிய விரைவில் மீட்கவில்லை என்றால் உலகப்பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் எனக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் எனவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் $400 million மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக் CNBC அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவர்கிவ்வன் சரக்கு கப்பல்


உலக நாடுகளை கவலை கொள்ளச்செய்திருக்கும் எவர்கிவ்வன் கப்பலை மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கப்பலின் இரண்டு பக்கமும் மணல் அள்ளும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதனிடையே எவர்கிவ்வன் சரக்கு கப்பலில் பணிபுரிந்து வரும் 25 சிப்பந்திகளுமே இந்தியர்கள் என்று கப்பலின் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனமான Bernhard Schulte தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் எகிப்தின் கால்வாய் ஆணைய அதிகாரிகள் இருவர் அக்கப்பலை வழிநடத்திச் செல்வதற்காக கப்பலில் பயணித்ததாகவும் கப்பலில் உள்ள அனைவருமே பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இக்கப்பல் ஜப்பானியர் ஒருவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இக்கப்பல் எப்போது மீட்கப்படும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இக்கப்பல் மீட்கும் பணிகள் நடைபெற சில வாரங்கள் ஆகலாம் எனவும் பல ஆயிரம் கிலோமீட்டர் தூதரத்திற்கு கப்பல்கள் மாற்று வழியில் செல்வதாக இருந்தால் நிலைமை மோசமாகலாம் எனவும் கருத்துக்கள் எழுந்துள்ளன.
Published by:Arun
First published: