காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு... 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பாபாகுந்த், ஹண்ட்வாரா பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச்சூடு

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு... 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: March 3, 2019, 9:10 AM IST
  • Share this:
காஷ்மீரில் தொடர்ந்து 3-வது நாளாக நடந்துவரும் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 2 பேர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸார் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான். இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது வருகிறது.

தற்போது ஜம்மு-காஷ்மீரில் பாபாகுந்த், ஹண்ட்வாரா பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச்சூடு அவ்வப்போது நடைபெற்று வருகிறது. 3-வது நாளாக இந்த துப்பாக்கிச்சூடு நீடித்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸார் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது




Also watch

First published: March 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading