டெல்லியில் நாளை தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம்!
தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென ஆணையர் அசோக் லவாசா கேட்டுக்கொண்சுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டம் - கோப்புப் படம்
- News18
- Last Updated: May 20, 2019, 9:05 AM IST
டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்தும் முரண்பாடு இல்லாமல் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி மீதான தேர்தல் விதிமீறல் புகார்கள் விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஊடகங்கள் மூலம் வெளியுலகிற்கு வந்தப் பிறகு முதல்முறையாக தேர்தல் ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென ஆணையர் அசோக் லவாசா கேட்டுக்கொண்டு இருப்பதால், அவருக்கு விலக்கு அளிக்கப்படுமா? அல்லது சமரச பேச்சுவார்த்தை மூலம் அவர் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Also see... வாக்காளர் அக்கறையின்மை: நகரங்கள் மற்றும் கிராமங்கள் ஓர் ஒப்பீடு!
Also see...
மக்களவைத் தேர்தலில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்தும் முரண்பாடு இல்லாமல் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென ஆணையர் அசோக் லவாசா கேட்டுக்கொண்டு இருப்பதால், அவருக்கு விலக்கு அளிக்கப்படுமா? அல்லது சமரச பேச்சுவார்த்தை மூலம் அவர் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Also see... வாக்காளர் அக்கறையின்மை: நகரங்கள் மற்றும் கிராமங்கள் ஓர் ஒப்பீடு!
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.