அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியாது- தேர்தல் ஆணையம்

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியாது- தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: April 26, 2018, 10:06 AM IST
  • Share this:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் வரும் மே 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில்  காங்கிரஸ், பாஜக மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதில், கோலார் தங்க வயல், ஹனூர், காந்தி நகர் ஆகிய  தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதற்காக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கட்சி சின்னத்தை கோரி விண்ணப்பிக்க வேண்டும், ஆனால் அதிமுக தாமதமாக இரட்டை இலை சின்னத்தை கோரியதால் சின்னத்தை ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளது.


மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி எனவும், கர்நாடக மாநிலத்தில் அக்கட்சி அங்கீகரிக்கப்படவில்லை, எனவே இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
First published: April 26, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading