மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் ஒரு நாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது ஏன்?

நரேந்திர மோடி - மம்தா பானர்ஜி

மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரத்தை ஒருநாள் முன்கூட்டியே முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.

  • Share this:
    மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரத்தை ஒருநாள் முன்கூட்டியே முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.

    மேற்குவங்கம் மாநிலலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5ஆம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 17ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

    இதில், டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் ஜல்பாய்குரி மற்றும் வடக்கு 24 பா்கானாக்கள் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் மொத்தம் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இந்த தொகுதிகளில் 1.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கின்றனர். மேற்கு வங்கம் மாநிலத்தின் இந்த 5 ஆம் கட்ட தேர்தலுக்காக 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. அத்துடன் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.

    இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் அனைத்தும் இன்று மாலையில்தான் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு தொடக்கம் முதலே பதற்றத்துடன் இருந்து வருகின்றது.

    மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வெறுப்பு அரசியல் காரணமாக கடுமையான விமர்சன உரைகள், தேர்தல் நடத்தை விதிமீறல் சம்பவங்கள் என விரும்பத்தகாத பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்களின் பிரசாரத்திற்கு தடை விதிக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

    அத்துடன், நடந்து முடிந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது சிட்டால்குச்சியில் வன்முறை ஏற்பட்டதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன், மற்றொரு வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர் ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

    Must Read : போதுமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது - பிரதமர் மோடி

     

    இதனால், 5ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரத்தை ஒருநாள் முன்கூட்டியே முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி அங்கு 5ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் அனைத்தும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: