• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • திருப்பதியிலிருந்து 2,550 படிகளில் அங்கப்பிரதட்சனம் செய்து திருமலையை அடைந்த பக்தர்

திருப்பதியிலிருந்து 2,550 படிகளில் அங்கப்பிரதட்சனம் செய்து திருமலையை அடைந்த பக்தர்

திருப்பதியிலிருந்து 2,550 படிகளில் அங்கப்பிரதட்சனம் செய்து திருமலையை அடைந்திருந்திருக்கார் பக்தர் ஒருவர்.

  • Share this:
    திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக மலைப்பாதையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், திருச்சானூரிலிருந்து அலிபிரி வழியே 3500 படிக்கட்டுகளில் ஏறி திருமலையை அடையலாம். அல்லது, ஸ்ரீவாரிமெட்டிலிருந்தும் 2550 படிக்கட்டுகள் வழியே பக்தர்கள் ஏறிச்செல்லலாம்.

    இப்படி மலைப்பாதை படிக்கட்டுகளில் ஏறிச்செல்பவர்களுக்கு மத்தியில், உருண்டே சென்று திருமலையை அடைந்திருக்கார் பக்தர் ஒருவர். அதுவும் 1 கி.மீ., 2 கி.,மீ., தூரமல்ல.,,, ஆறரை கிலோ மீட்டர் தூரம்... 2,550 படிக்கட்டுகளை அங்கப்பிரதட்சணம் செய்தே கடந்திருக்கிறார்.

    பொன்னால பிரபாகர் எனும் அந்த பக்தர், முதலில் திருப்பதியின் சீனிவாசமங்காபுரத்திலிருந்து ஸ்ரீவாரிமெட்டு வரை 3 கிலோ மீட்டர் சாலையில் தூரம் அங்கப்பிரதட்சனம் செய்துள்ளார். அவருக்கு உதவியாக வந்த நண்பர்கள், சாலையை சுத்தப்படுத்த, "கோவிந்தா கோவிந்தா" எனும் கோஷத்துடன் உருண்டுள்ளார் பிரபாகர்.



    மூன்று கிலோ மீட்டரில் ஸ்ரீவாரிமெட்டை அடைந்ததும், அங்கிருந்து திருமலைக்கு 2550 படிக்கட்டுகள் பயணம். கிட்டத்தட்ட மூன்றரை கிலோ மீட்டர் தூரம். ஒவ்வொரு படியாக பிரபாகர் உருள, அவரை தூக்கி அடுத்தபடிக்கு நகர்த்துகிறார்கள் நண்பர்கள். இப்படியாக 15 மணி நேரம் தொடர்ந்தது இந்த படிக்கட்டு அங்கப் பிரதட்சணம்...

    இறுதியில் திருமலையில் ஏழுமலையானை தரிசித்தார். திருப்பதியில் கேபிள் ஆபரேட்டராக உள்ள பிரபாகருக்கு இது முதல் நேர்த்திக்கடன் அல்ல. இதற்கு முன்பே அலிபிரி வழியாக 3500 படிக்கட்டுகளில் உருண்டே சென்று திருமலையை அடைந்திருக்கிறார். இதுபோக காளஹஸ்தியில் உள்ள கண்ணப்ப நாயனார் மலையையும் நான்கு நாட்கள் அங்கப்பிரதட்சணம் செய்தே கிரிவலம் வந்துள்ளார். பிரபாகரின் இந்த நேரத்திக்கடனை கண்டு பலரும் மெய்சிலிர்த்து போயுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: