“பாசிட்டிவிட்டி அன்லிமிடெட்”- ஜீவ-மரண சுழற்சி தொடரும்... இவை நம்மை அச்சுறுத்தாது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.

'கொரோனா முதல் அலை பரவல் குறைந்த பின், அரசும், மக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டதால் தான் இரண்டாவது அலை பரவியது,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

 • Share this:
  கொரோனா அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொள்ளவும், மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், 'நேர்மறை எண்ணங்கள் எல்லையில்லாதது' ('Positivity Unlimited'), என்ற தலைப்பில், 'ஆன்லைனில்' தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

  இதில் நேற்றைய சொற்பொழிவில் மோகன் பகவத் பேசியதாவது:

  கொரோனா முதல் அலை பரவிய போது, அதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை, மக்கள் முழுமையாக பின்பற்றினர். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பதை அரசு நிர்வாகமும் கண்காணித்து உறுதி செய்தது. முதல் அலை பரவல் குறைந்ததும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில், மக்கள் மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் அலட்சியம் காட்டியது. இதனால் தான் இரண்டாவது அலை தீவிரமாக பரவியுள்ளது.

  மூன்றாவது அலை பற்றியும் பேசப்படுகிறது. இதற்கு நாம் பயப்படக் கூடாது. நாம் ஒற்றுமையாக எழுந்து நின்றால் கொரோனா சவால்களை முறியடித்து விடலாம். நம்பிக்கையுடன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், கொரோனாவை வென்று விடலாம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வதை விடுத்து, தொற்றிலிருந்து விடுபட அனைவரும் முயற்சிக்க வேண்டும். தைரியத்தை கைவிடாமல் உறுதியாக இருந்தால் நெருக்கடியிலிருந்துவிரைவில் மீள்வோம்.

  ஜீவ மரண சுழற்சி தொடரவே செய்யும் இவை நம்மை அச்சுறுத்தாது. இப்படிப்பட்ட சூழ்நிலைதான் நம்மை எதிர்காலத்துக்கான பயிற்சியை அளிக்கும். வெற்றி இறுதியும் அல்ல, தோல்வி அழிவு தருவதும் அல்ல. தொடர்ந்து இருத்தலுக்கான தைரியம் மட்டுமே இங்கு விஷயம்

  தேசத்தின் கவனத்தை ஒட்டுமொத்தமாக எதிர்காலம் நோக்கித் திருப்பி நடப்பு அனுபவங்களிலிருந்து பாடம் கற்று அதன் படி நடக்க வேண்டும்.

  இவ்வாறு பேசினார்.

  இந்த நிகழ்ச்சியில் விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி, ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

  இந்த பாசிட்டிவிட்டி அன்லிமிடெட் சொற்பொழிவுகள் அவர்கள் சமூக ஊடகங்களில் லைவ் ஆக ஒளிபரப்பப் படுகின்றன.
  Published by:Muthukumar
  First published: