அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி

News18 Tamil
Updated: May 26, 2019, 12:05 PM IST
அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
News18 Tamil
Updated: May 26, 2019, 12:05 PM IST
அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய கடினமாக உழைக்க வேண்டும் என்று தனது அலுவலக ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் பேசிய நரேந்திர மோடி, ‘‘என்னுடன் 5 ஆண்டுகள் குடும்ப உறுப்பினர்களாக இருந்து கடினமாக உழைத்த அலுவலக ஊழியர்களுக்கு நன்றி. அரசின் பொறுப்புகளை உணர்ந்து ஊழியர்கள் அனைவரும் தங்கள் கடமைகளை சிறப்பாக செயல்படுத்தினீர்கள். குடும்பத்தையும் மறந்து நேரம் காலம் பார்க்காமல், பணி புரிந்தீர்கள்.

பிரதமர் அலுவலகம் திறமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம். இந்தத் தேர்தல் வெற்றி மூலம் திறமையான செயல்பாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத் திறமை மிக்க தலைமையே வெற்றிக்கு வழிகாட்டும் திறவுகோல். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கு ஆற்றல் வாய்ந்த தலைமையே காரணம். அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமையும் வகையில் செயல்படுவோம். கூட்டு தலைமைக்கு முக்கியத்துவம் அளித்து புதிய திட்டங்களை நிறைவேற்றுவோம்’’ என்று பேசினார் மோடி.

பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் நிர்பேந்திர மிஸ்ரா, கூடுதல் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா, பிரதமரின் செயலாளர் பாஸ்கர் குல்பே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
First published: May 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...