THE COUNTING OF VOTES IN THE TELANGANA STATE AND HYDERABAD MUNICIPAL ELECTIONS HAS BEGUN VIN
Telengana | Hyderabad | ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு..
வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்
தேர்தல் பரப்புரையின் போது பாஜக வேட்பாளர்களுக்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரம் செய்ததால் தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளன.ஐதராபாத் மொத்தமுள்ள 150 வார்டுகளுக்கு டிசம்பர் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் பழைய மலக்பேட் வார்டுக்கு மட்டும் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமாக 150 வார்டுகளிலும் 42 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணும் பணி இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கியது.
இதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிய சமிதி, அசாதுதீன் ஓவைசியின் AIMIM, பாஜக, காங்கிரஸ் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தேர்தல் பரப்புரையின் போது பாஜக வேட்பாளர்களுக்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரம் செய்ததால் தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.