உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என்ற அமைச்சர் நாராயண் ரானே.. யார் இவர்?

நாராயண் ரானே, உத்தவ் தாக்கரே

சிவ சேனா கட்சி தான் நாராயண் ரானேவின் அரசியல் அடித்தளம். கவுன்சிலர் பதவியில் இருந்து மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி வரை இவரை அமர வைத்து அழகு பார்த்தது சிவசேனா.

 • Share this:
  உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைந்திருப்பேன் என பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை அதிரடியாக கைது செய்துள்ளது மகாராஷ்ட்ரா போலீஸ். கடந்த 20 ஆண்டுகளில் ஒரு மத்திய அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. நாராயண் ரானே கைதால் மும்பையே பரபரப்படைந்துள்ளது.

  யார் இந்த நாராயண ரானே..!
  சிவ சேனா கட்சி தான் நாராயண் ரானேவின் அரசியல் அடித்தளம். கவுன்சிலர் பதவியில் இருந்து மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி வரை இவரை அமர வைத்து அழகு பார்த்தது சிவசேனா. 20 வயதில் தனது அரசியல் வாழ்க்கையை சிவசேனாவில் தொடங்கினார். அப்போது பால் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவராக இருந்தார். 1990-ல் சிவசேனா எம்.எல்.ஏவாக மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

  Also Read: மரணத்தின் விளிம்பில் இருந்து திரும்பியுள்ளேன் – ஆப்கானில் இருந்து திரும்பிய கேரள இளைஞர்

  1998-ல் மனோகர் ஜோஷி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து பால்தாக்கரேவால் நாராயண் ரானே மகாராஷ்ட்ரா முதல்வராக நியமிக்கப்பட்டார். சுமார் 8 மாதங்கள் முதலமைச்சராக இருந்தார். அடுத்த தேர்தலில் சிவ சேனா கூட்டணி தோல்வியை சந்தித்தது. நாராயண் ரானே முதல்வர் ஆக்கப்பட்டதில் உத்தவ் தாக்கரேவுக்கு அப்போது உடன்பாடில்லை எனக் கூறப்படுகிறது. அப்போது இருந்தே இருவருக்குள்ளும் கருத்து மோதல் நிலவி வந்துள்ளது. பால் தாக்கரேவின் முடிவால் நாராயண் ரானே முதல்வராக்கப்பட்டுள்ளார்.

  Also Read: மத்திய அமைச்சர் திடீர் கைது! - 20 ஆண்டுகளில் முதல் முறை..

  2005-ல் சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸில் ஐக்கியமானார். காங்கிரஸ் கட்சி நாராயண் ரானேவுக்கு அமைச்சர் பதவி வழங்கியது. சில காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் தனக்கு முதல்வர் பதவி வழங்கவில்லை எனக் கூறி சோனியா காந்தியை கடுமையாக தாக்கிப்பேசத் தொடங்கினர். இதன்காரணமாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் காங்கிரஸ் தலைமையை சந்தித்து மன்னிப்பு கேட்டபின்னர் அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தது அதில் தோல்வியை தழுவினார். அதன்பின்னர் நடந்த இடைத்தேர்தலிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது சிவசேனா வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ரானேவுக்கு  நிதேஷ் , நிலேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். ரானே பதவியில் இருந்த போது அவரது மகன்கள் தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2016-ல் காங்கிரஸ் தலைவரை கடத்தியதாக நிலேஷ் மீது வழக்குப்பதிவானது. 2017- ல் நிதிஷ் மீது பணம் பறிப்பில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவானது. 2013- சுங்கச்சாவடியை சூரையாடியதற்காக கோவாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதல்வர் பதவி கேட்டு காங்கிரஸ் கட்சியில் சண்டைப்போட்டு வெளியேறினர்.

  2017-ல் தனது மகன்களுடன் சேர்ந்து மகாராஷ்ட்ரா சுவாபிமான் பக்‌ஷா (  Maharashtra Swabhiman Paksha’)என்ற கட்சியை ஆரம்பித்து பாஜகவை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். ரானேவின் மகன் நிதேஷ்-க்கு 2019 தேர்தலில் பாஜக சீட்டு வழங்கியது. பாஜக தயவால் நாராயண் ரானே ராஜ்ய சபா எம்.பியாக பதவி வகித்து வருகிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: