Home /News /national /

மத்திய தகவல் ஆணையத்தின் கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் பதிலளிக்க மறுப்பு

மத்திய தகவல் ஆணையத்தின் கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் பதிலளிக்க மறுப்பு

மத்திய தகவல் ஆணையம்

மத்திய தகவல் ஆணையம்

  • News18
  • Last Updated :
    மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்த விவரங்களை வெளியிடுமாறு பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், இதற்கு பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

    2014- ம் ஆண்டு முதல் 2017- ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மீது எழுந்த ஊழல் புகார்கள், அதன் மீது அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை தெரிவிக்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சஞ்சிவ் சதுர்வேதி என்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை சுட்டிகாட்டியுள்ள தலைமை தகவல் ஆணையர் ராதா கிருஷ்ண மாதூர், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டு, இந்தியா கொண்டுவரப்பட்டுள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று விளக்கமளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு மக்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு என தெரிவிக்குமாறும் பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கறுப்பு பணம் குறித்த கேள்வி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்க முடியாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்த சஞ்சிவ் சதுர்வேதியின் கேள்விகளுக்கும், பிரதமர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை என்றும் தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Central Information Commission, Corruption allegations

    அடுத்த செய்தி