ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம்

news18
Updated: July 11, 2018, 1:25 PM IST
ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம்
கோப்புப் படம்
news18
Updated: July 11, 2018, 1:25 PM IST
ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 377-இன் படி, இயற்கைக்கு மாறாக ஆண், பெண் அல்லது விலங்கினங்களுடனான உறவு தண்டனைக்குரியதாகும். இந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்க தற்போதுள்ள சட்டம் வழிவகை செய்கிறது. இந்நிலையில் கடந்த 2009-ஆம் தேதி, இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, இயற்கைக்கு மாறான உறவு சட்டவிரோதமல்ல என உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, 2013-ஆம் தேதி இந்த உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, "இயற்கைக்கு மாறான எந்த உறவும் சட்டவிரோதம்" என தீர்ப்பளித்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், ஓரினச் சேர்க்கையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் நாஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பிரிவு 377 தொடர்பாக உச்ச நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கினாலும் அதனை ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் ஓரினச் சேர்க்கை திருமணம் குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இருவர் விரும்பி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றம் என்று கருத முடியாது. இருப்பினும் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணைத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...