மெசேஜ் அனுப்புபவரின் விவரம் கண்டறிய உதவுமாறு வாட்ஸ் அப்-க்கு மத்திய அரசு வேண்கோள்

குற்றச்செயல்களுக்கு காரணமாக அமையும் வாட்ஸ்அப் தகவல்களை, அனுப்பியவர்கள் குறித்த தகவல்களை கண்டறிய உதவ வேண்டும் என்று வாட்ஸ்அப் நிறுவனத்தை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டார்.

Web Desk | news18
Updated: November 1, 2018, 10:58 AM IST
மெசேஜ் அனுப்புபவரின் விவரம் கண்டறிய உதவுமாறு வாட்ஸ் அப்-க்கு மத்திய அரசு வேண்கோள்
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: November 1, 2018, 10:58 AM IST
கொடுமையான குற்றச்செயல்களுக்கு காரணமாக அமையும் வாட்ஸ்அப் தகவல்களை, அனுப்பியவர்கள் குறித்த தகவல்களை கண்டறிய உதவ வேண்டும் என்று வாட்ஸ்அப் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்லியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் சந்தித்துப் பேசினார்.

அப்போது, வன்முறை மற்றும் கொடுமையான குற்றச்செயல்களுக்கு வாட்ஸ்அப் தகவல்கள் காரணமாக அமையும்போது, அந்தத் தகவலை முதலில் அனுப்பியவர் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள உதவுமாறு ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டார். மேலும், பயன்பாட்டாளர்கள் அனுப்பும் அனைத்து தகவல்களையும் ஆய்வுசெய்ய வேண்டியதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து ஆய்வுசெய்வதாக டேனியல்ஸ் உறுதியளித்தார்.

வாட்ஸ் அப்பில் விளம்பரம்:

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டேனியல்ஸ், தங்களது நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப்-பில் இனிமேல் விளம்பரம் வெளியிடப்படும் என்று கூறினார்.

வாட்ஸ்அப்-பில் உள்ள ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரம் வெளியிடப்படும் என்றும், நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கவும், நிறுவனங்கள் மக்களை சென்றடைவதற்கு உதவும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கிறிஸ் டேனியல்ஸ் தெரிவித்தார்.
First published: November 1, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626