மானிய விலையில் மாநிலங்களுக்கு பருப்பு: மத்திய அரசு முடிவு

news18
Updated: August 10, 2018, 12:34 PM IST
மானிய விலையில் மாநிலங்களுக்கு பருப்பு: மத்திய அரசு முடிவு
கோப்புப் படம்
news18
Updated: August 10, 2018, 12:34 PM IST
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் குவிந்துகிடக்கும் 35 லட்சம் டன் பருப்பு வகைகளை, மாநிலங்களுக்கு மானிய விலையில் வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான  அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் நாடு தழுவிய அளவில் பருப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெற்றது. இதனால், விலைகுறைந்ததால், விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகளை மத்திய அரசே கொள்முதல் செய்தது. இதனால், சேமிப்பு கிடங்குகளில் 45,43,000 டன் பருப்பு வகைகள் குவிந்து கிடக்கின்றன.

இந்த ஆண்டில், பருப்பு வகைகளை கொள்முதல் செய்வதற்கு வழி ஏற்படுத்தும் வகையில், 34,88,000 டன் பருப்பு வகைகளை மாநிலங்களுக்கு மானிய விலையில் அடுத்த 12 மாதங்களுக்குள் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.

இதன்படி, பொது விநியோகத் திட்டம், மதிய உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு, ஒட்டுமொத்த விலையில் கிலோவுக்கு 15 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...