திருத்தப்பட்ட முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்

news18
Updated: August 10, 2018, 10:52 AM IST
திருத்தப்பட்ட முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்
பாராளுமன்றம்
news18
Updated: August 10, 2018, 10:52 AM IST
முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்கும் மசோதாவை, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதனை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்லாமியர்கள் பின்பற்றிவரும் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறி, இதனை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, கைதுசெய்யப்படும் நபர், ஜாமீன் பெறலாம் என மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த மசோதாவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. பெண்களுக்கு நீதி வழங்குவதை உறுதிப்படுத்த, இந்த மசோதாவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்தார்.

ஜாமீன் வழங்கும் வகையில், திருத்தம் செய்தபிறகும், காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் எதிர்க்குமா என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...