கண்ணூர் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து திடீரென தீ பற்றி தீக்கிரையானது. பேருந்தில் பயணம் செய்த 37 கல்லூரி மாணவர்கள் உட்பட மூன்று ஆசிரியர்களும் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர். பேருந்து தீ பற்றி எரியும் வீடியோ வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர், குற்றூர் பகுதியிலுள்ள பி.எட் கல்லூரியில் இருந்து மாணவர்கள் 37 பேர் மற்றும் 3 ஆசிரியர்கள் கொண்ட குழு கடந்த இரு நாட்களுக்கு முன்பு கண்ணூரில் இருந்து கோவாவுக்கு Study tour சென்றுள்ளனர். நேற்றைய தினம் மாலை சுற்றுலாவை முடித்துவிட்டு கோவாவிலிருந்து-கண்ணூர் நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணித்த பேருந்து கோவா பனாஜி என்ற பகுதியை அடைந்ததும் பஸ்ஸின் பின் பகுதியில் இருந்து தீ பற்றி புகை வருவதை கல்லூரி மாணவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மாணவர்கள் பின் பகுதியில் தீ பற்றுவதாக ஓட்டுனரிடம் கூறியுள்ளனர். உடனே ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி உள்ளார். உடனடியாக மாணவர்களும், ஆசிரியர்களும் பஸ்சை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீ மளமளவென படர்ந்து எரிய ஆரம்பித்து, பஸ் முழுவதும் தீக்கிரையாகியது. அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வருவதற்குள் பேருந்து முழுவதுமாக தீ எரிந்து கருகியது. மாணவர்களின் உடைமைகளும் அந்தத் தீயில் கருகின.
தீ பற்ற துவங்கியதும் பேருந்து நிறுத்தப்பட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் அதிலிருந்து இறங்கி உடனடியாக வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்தப் பேருந்தில் பயணித்த 37 கல்லூரி மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உட்பட ஓட்டுனரும் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
Must Read : நாகை கல்லூரி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு 3வது நாளாக தொடர் போராட்டம்!
இது குறித்து காவல்துறையின் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பேருந்தில் எற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்து எரிந்து தீக்கிரையான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Fire accident, Kanyakumari