கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள மண்துருத்தி என்ற பகுதியை சார்ந்த ஒவருக்கும் , கல்லுநாகம் பகுதியை சார்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தாரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரட்டகுளங்கரை பகுதியிலுள்ள கோவில் மண்டபத்தில் வைத்து திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தாலி கட்டுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மணமகன் மணமகளுக்கு மாலை போட சென்றதும் மணப்பெண் மணமேடையை விட்டு இறங்கி ஓடியுள்ளார்.
ஓடி மண்டபத்திலுள்ள ரூமில் சென்று உட்பக்கமாக பூட்டி விட்டு உள்ளேயே இருந்துள்ளார். குடும்பத்தாரும், உறவினர்களும், கூடி இருந்தவர்களும் மணமகளை சமாதானப்படுத்த முயன்றும் மணமகள் கதவை திறக்காததால் மண்டபத்தில் கூடி இருந்தவர்கள் கிளிக்கல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பெண் வீட்டாருக்கும், ஆண் வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு திருமண நிகழ்ச்சி பாதியில் முடங்கியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணமகளிடம் வெளியில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் வெளியே வந்த மணமகளையும், பெண் வீட்டார் உட்பட ஆண் வீட்டாரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கே நடத்தப்பட்ட விசாரணையில் மணப்பெண், தான் மற்றொரு நபரை காதலிப்பதாகவும், வீட்டார் நிர்பந்தத்தால் தான் இந்த திருமணம் நடக்க இருந்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பெண் வீட்டார், ஆண் வீட்டாருக்கு நஷ்ட ஈடு வழங்கலாம் என்று பேச்சுவார்த்தை நடந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
Must Read : துறவி வாழ்க்கைக்கு திருமணம் தடையாக இருந்ததால் நிச்சயிக்கப்பட்டவரின் கழுத்தை அறுத்தேன் - ஆந்திரப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்
பின்னர், போலீசார் அறிவுரைகள் கூறி இரு வீட்டாரையும் அனுப்பி வைத்துள்ளனர். திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.