சிவ தாண்டவ் ஸ்தோத்திரத்தை ஒரு நிமிடத்திற்குள் பாடி சாதனை படைத்த சிறுவன்!

சிவ தாண்டவ் ஸ்தோத்திரத்தை ஒரு நிமிடத்திற்குள் பாடி சாதனை படைத்த சிறுவன்!

சாதனை படைத்த சிறுவன்

லங்கா மன்னர் ராவணன் சமஸ்கிருதத்தில் எழுதிய சிவ தாண்டவ் ஸ்தோத்திரத்தின் 15 ஸ்லோகங்களை வெறும் 55 விநாடிகளிலும் 29 மில்லி விநாடிகளிலும் முடித்து விவான் குப்தா இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.

  • Share this:
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்ட அறிக்கையின்படி, வடமேற்கு டெல்லியின் பிதாம்புரா பகுதியில் உள்ள பால் பாரதி பப்ளிக் பள்ளியில் விவான் படித்து வருகிறார். இவரது பாட்டி சிவ தாண்டவ் ஸ்லோகங்களை ஒரு சடங்காக ஓதுபவராவார். தினமும் தனது பாட்டி பாடுவதை கேட்ட இந்த சிறுவன், தனது பாட்டியால் ஈர்க்கப்பட்டு தினமும் அவற்றைப் பயிற்சி செய்யத் தொடங்கினார்.

இதனை ஒரு நாள் கவனித்த அவரது தாத்தா அனில் குப்தா, ​​சிக்கலான சொற்றொடர்களை சாதாரண மனிதர்களை விட வேகமாக மனப்பாடம் செய்யும் திறன் அந்த சிறுவனிடம் இருப்பதை கவனித்துள்ளார். இதனால் உடனடியாக அவர் சிறுவன் விவான் குப்தாவை ஊக்குவிக்க தொடங்கினார்.

சிவ தாண்டவ் ஸ்தோத்திரத்தில் பல சிக்கலான சொற்றொடர்கள் இடம் பெற்றிருக்கும். "இந்த சிக்கலான ஸ்லோகங்களை " மனப்பாடம் செய்வது எளிதானது அல்ல, ஆனால் விவான் இவற்றை எளிதாக மனப்பாடம் செய்தது மட்டுமின்றி வெறும் 55 விநாடிகளிலும் 29 மில்லி விநாடிகளில் பாடி  சாதனை படைத்துள்ளார். விவான் சாதனை படைத்ததில் பெருமைப்படுவதாக அவரது தாத்தா கூறினார்.

சிவ தாண்டவ் ஸ்தோத்திரம் என்பது சிவபெருமானின் தீவிர பக்தரான லங்கா மன்னர் ராவணன் தனது சக்தியையும், அழகையும் புகழ்ந்து பாடிய ஒரு சிக்கலான பாடலாகும். சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை உச்சரிப்பது அல்லது கேட்பது அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் நீக்கி, அபரிமிதமான பாசிட்டிவ் எண்ணங்களையும், ஆற்றலையும், மன வலிமையையும் அளிக்கும் என நம்பப்படுகிறது.

சிவபெருமான் தன்னை மறந்து ஆடும் தாண்டவ நடனத்தை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை "மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, பிரதோஷம்” மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் “திருவாதிரை” நட்சத்திர தினங்களில் உடல் மற்றும் மன சுத்தியுடன், சிவபெருமானை தியானித்து இந்த தாண்டவ ஸ்தோத்திர பாடலை படித்து வந்தால் நமது சித்தத்தில் தெளிவு ஏற்படும். நாம் நம்மை அறியாமல் உடல், மனம், வாக்கு ஆகியவற்றால் பிறருக்கு செய்த பாவங்களை சிவபெருமான் போக்கி அருள்வார். மேலும் எல்லாவற்றிலும் இறைவனை காணும் மனநிலை சிறிது சிறிதாக வளரும். நம்முள் இருக்கும் தீயவைகள் எல்லாம் அழியும் என்பது நம்பிக்கை.
Published by:Tamilmalar Natarajan
First published: