'ஜனநாயகத்தின் கருப்பு நாள்' - வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு விமர்சனம்

பேரணி தொடங்க இருந்த குண்டூர் மாவட்டம் பல்நாடு பகுதிக்கு செல்ல முயன்ற சந்திரபாபு நாயுடுவை போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டுக்காவலில் வைத்தனர்.

Web Desk | news18-tamil
Updated: September 11, 2019, 8:18 PM IST
'ஜனநாயகத்தின் கருப்பு நாள்' - வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு விமர்சனம்
சந்திரபாபு நாயுடு
Web Desk | news18-tamil
Updated: September 11, 2019, 8:18 PM IST
கைது நடவடிக்கையின் மூலம் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் கருப்பு நாள் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் எதிர்க்கட்சியினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும், ஆளுங்கட்சியின் வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி வருகிறார்.

அட்மகூரில் வசிக்கும் தெலுங்குதேசம் கட்சியினர் உயிருக்கு பயந்து தங்களது சொந்த ஊரைக் காலி செய்துவிட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து தெலுங்குதேசம் கட்சி சார்பில் அட்மகூர் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இதன்படி, பேரணி தொடங்க இருந்த குண்டூர் மாவட்டம் பல்நாடு பகுதிக்கு செல்ல முயன்ற சந்திரபாபு நாயுடுவை போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டுக்காவலில் வைத்தனர். அவரது வீட்டின் முன்பக்க கதவை பூட்டியதுடன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் முக்கியத் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நரசரோபேட்டா, சட்டினபள்ளி, பல்நாடு, குரஜலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

Loading...

இந்நிலையில், ஆந்திராவில் முன்னெப்போதும் காணாத வகையில் பாசிசம் அதிகரித்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது தவறானது என்றும் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்றைய தினம் ஜனநாயகத்தின் கருப்பு தினம் என்றும் கைது நடவடிக்கையால் தனது போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Watch

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...