ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் மசோதா இன்று தாக்கல்

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் மசோதா இன்று தாக்கல்

வாக்காளர் அடையாள அட்டை - ஆதார்

வாக்காளர் அடையாள அட்டை - ஆதார்

வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்கும் போது முதன்மை அடையாளமாக ஆதார் எண்ணை சேர்ப்பதற்கு வழிவகை செய்யும் மசோதாவை, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதா மூலம் 18 வயது நிரம்பியவர்கள் இனிமேல் ஆண்டுக்கு நான்கு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏதுவாகவும் மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார்.

  வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்கும் போது முதன்மை அடையாளமாக ஆதார் எண்ணை சேர்ப்பதற்கு இந்த மசோதா வழிவகை செய்யும். அதே நேரத்தில் ஆதார் இல்லை என்பதற்காக ஒருவர் பெயரை வாக்களர் பட்டியலில் சேர்க்க மறுக்க முடியாது.

  ஏற்கனவே நடைமுறையில் உள்ள மற்ற ஆவணங்கள் மூலம் ஒருவரது பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி முதல் தேதியில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்ற நடைமுறை தற்போது உள்ள நிலையில், ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 தேதிகளில் 18 வயதை எட்டியவர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் விதமாக திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளது.

  Read More : தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

  மக்களவை உறுப்பினர்களுக்கு சுழற்சியில் விடப்பட்டுள்ள மசோதாபடி, 1950 மற்றும் 1951-ம் ஆண்டுகளின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் திருத்தப்பட உள்ளன.

  Must Read : முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை

  மசோதாவின் பொருள் மற்றும் காரணங்களின் அறிக்கை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 23, வாக்காளர் பட்டியல் தரவை ஆதாருடன் இணைப்பதற்காக திருத்தப்படும் என்று கூறுகிறது. இதனால் ஒரே நபர் வெவ்வேறு இடங்களில் வாக்காளர்களாக பல முறை சேருவது தடுக்கப்படும்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Aadhaar card, Lok sabha, Parliament, Voters ID