20 ஆண்டுகளாக காதலித்திருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்துக்கொண்ட கேரள தம்பதியினர், தற்போது ஒரே அரசுப்பேருந்தில் டிரைவர் மற்றும் கண்டக்டராகப் பணியாற்றுவரும் சுவராஸ்சிய காதல் கதை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் இயங்கக்கூடிய அரசுப் பேருந்து ஒன்று. இதில் பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளதாகக் கூறப்பட்டாலும், மற்றொரு சுவாரஸ்சியமான விஷயம், ஒரே பேருந்தில் கணவன் மற்றும் மனைவி தான் டிரைவர் மற்றும் கண்டக்டராக பணியாற்றி வருவதோடு சொந்த செலவில் பல அடிப்படை வசதிகளை செய்துள்ளனர். பேருந்தில் உள்ள அடிப்படை வசதிகள் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்னதாக, இத்தம்பதியினர் சுவாரஸ்சியமான காதல் கதை குறித்து நிச்சயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கேரள தம்பதியினரின் காதல் கதை:
கேரளத்தை சேர்ந்த கிரி மற்றும் தாரா என்ற தம்பதியினர் கடந்த 20 ஆணடுகளுக்கு முன்னதாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் போது காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தப்போது தான் ஜாதகம் சரியில்லை என பெற்றோர்கள் மறுத்துள்ளனர். இருந்த போதும் தொடர்ந்து இவர்கள் காதலித்து வந்த நிலையில் தான், கொரோனா ஊரடங்கின் போது அதாவது 2020 ஆம் ஆண்டு தான் திருமணம் செய்துள்ளனர். 20 ஆண்டுகள் காதல் வாழ்க்கையை வெற்றிக்கரமாக திருமணத்தில் முடித்த இவர்கள், தற்போது வாழும் வாழ்க்கையும் சுவாரஸ்சியம் நிறைந்ததாகவே உள்ளது.
ஒரே பேருந்தில் டிரைவர் மற்றும் கண்டக்டராக பணியாற்றும் கேரள காதல் தம்பதி:
கேரள மாநிலம் ஆலப்புழாவைச்சேர்ந்த காதல் தம்பதி கிரி மற்றும் தாரா இவர்கள் இம்மாநில அரசு போக்குவரத்து பேருந்து ஒன்றில் டிரைவர் மற்றும் கண்டக்டராக பணியாற்றி வருகின்றனர். இதில் என்ன சுவாரஸ்சியம் என்ன என்று கேட்கிறார்களா? மற்ற பேருந்துகளைப் போன்று இப்பேருந்து சாதாரணமானது இல்லை. பயணிகளின் வசதிக்கேற்ப பல அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக பேருந்தில் பயணிகள் பாதுகாப்பிற்காக 6 சிசிடிவி கேமிராக்கள், அவசரகால சுவிட்சுகள், பயணத்தை இனிமையாக்க பாடல்களை கேட்கும் வசதி, குழந்தைகளைக் கவரும் வகையில் ஸ்மைலி பொம்மைகள் , எல்இடி லைட்டுகள் என பேருந்து முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் அனைத்தும் இந்த காதல் தம்பதியினரின் சொந்த செலவில் தான் செய்யப்பட்டுள்ளது பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ALSO READ | குடியரசுத் தலைவர் தேர்தல்: தமிழ்நாட்டிலிருந்து திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா பெறும் வாக்குகள் எவ்வளவு?
இப்படி பல்வேறு வசதிகள் இருப்பதனாலே பயணிகள் இப்பேருந்தில் பயணம் செய்வதோடு, இத்தம்பதியினருக்கு தீவிர ரசிகர்களாகவும் மாறிவிட்டனர். தினமும் ஆலப்புழாவிலிருந்து கிளம்பும் இப்பேருந்தில் வழக்கமாகப் பயணிக்கும் பயணிகள் தங்களுக்குள் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி இத்தம்பதியினர் மேற்கொள்ளும் சுவாரஸ்சிய விஷயங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தான் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். இதோடு தன்னுடைய வாழ்க்கையை ருசிகரமாக்க இப்படியும் வாழலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக இத்தம்பதியினர் உள்ளனர்.
இது குறித்து கேரள பேருந்தில் கண்டக்டராகப் பணியாற்றும் தாரா கூறுகையில், ஒவ்வொரு நாளும் நான் மற்றும் எனது கணவர் கிரி அதிகாலை 1.15 மணிக்கு எழுந்துவிடுவோம்.பின்னர் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சுமார் 2 மணிக்கு பேருந்து டெப்போவுக்கு செல்வோம். பின்னர் பேருந்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுவதாகவும் பின்னர் காலை 5.50 மணிக்கு எங்களுடைய பணிகளைத் தொடங்குவோம் என மகிழ்வுடன் கூறுகிறார். காதல் வாழ்க்கையைப் போராட்டத்துடன் தொடங்கிய இவர்களின் வாழ்க்கை ருசிகரமாக்கிய இவர்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.