மேற்குவங்கத்தில் இன்று 4ஆம் கட்ட தேர்தல்: 44 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு...

மேற்குவங்கத்தில் இன்று 4ஆம் கட்ட தேர்தல்: 44 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு...

மாதிரி படம்

மேற்குவங்க மாநிலத்தில் இன்று 4ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 44 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

  • Share this:
    மேற்குவங்க மாநிலத்தில் இன்று 4ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 44 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    மேற்குவங்க மாநில சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 3 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்று 4ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

    மேற்குவங்க மாநிலம் ஹவுரா, ஹூக்ளி, அலிபுர்துவார், கூச் பெஹார், தெற்கு 24 பரகனாஸ், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள, 15 ஆயிரத்து, 940 ஓட்டுச்சாவடிகளுக்கு, 789 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலரும், மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி, பாஜகவைவைச் சேர்ந்த நடிகை ஷ்ரபந்தி சாட்டர்ஜியை எதிர்த்து களம் காண்கிறார். திரிணாமுல் காங்ங்கிரஸில் இருந்து சமீபத்தில் விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் ரஜிப் பானர்ஜி, ஹவுராவின் டோம்ஜுர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    Must Read : ரயில் சேவை குறைப்பா... பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையா? : ரயில்வே வாரியம் விளக்கம்

     

    வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published: