சிக்கிமில் முடிவுக்கு வந்த 24 ஆண்டு கால ஆட்சி!

பவன் குமார் சாம்லிங்

அருணாசலப்பிரதேசத்தில் பாஜக முதன் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் 24 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த பவன் குமார் சாம்லிங் ஆட்சியை பறிகொடுத்துள்ளார். இதேபோல் அருணாசலப்பிரதேசத்தில் பாஜக முதன் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற சிக்கிம், அருணாசலப்பிரதேச சட்டப்பேரவைத்தேர்தல் முடிவுகளும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. சிக்கிம் மாநிலத்தில் 32 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சிக்கும் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

அந்த மாநிலத்தில் 1994-ம் ஆண்டில் இருந்து 5 முறை முதல்வராக இருந்த பவன்குமார் சம்லிங்க் மீண்டும் களம் கண்டார். ஆனால், பவன்குமாரின் கட்சி 15 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று ஆட்சியை இழந்தது. சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று பவன் குமார் சம்லிங்கின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறது.

இதேபோல், அருணாசலப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் பாரதிய ஜனதா கட்சி முதன்முறையாக 32 இடங்களில் வென்றுள்ளது. அங்குள்ள 60 தொகுதிகளில் 3 இடங்களில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் போட்டியின்றி தேர்வாகியிருந்த நிலையில், மேலும் 29 எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெற்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெறும் 11 இடங்களில் மட்டுமே வென்ற பாரதிய ஜனதா கட்சி இம்முறை அசுர வளர்ச்சி பெற்று தனித்து ஆட்சி அமைக்கிறது. புதிதாக களம் கண்டுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி அடுத்த இடத்தில் உள்ளது.

காங்கிரஸ் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியைத் தழுவியுள்ளது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பெமா காண்டு மீண்டும் பதவியேற்க உள்ளார்.
Published by:Manoj
First published: