இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #ThankYouRahulGandhi ஹேஷ்டேக்! ராகுலுக்காக உருகும் தொண்டர்கள்

காங்கிரஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்தினார் என்று ராகுல் காந்திக்கு அவரது தொண்டர்கள் வாழ்த்து கூறும் வகையில் #ThankYouRahulGandhi என்ற ஹேஷ்டேக்கில் நன்றி தெரிவித்துவருகின்றனர்.

இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #ThankYouRahulGandhi ஹேஷ்டேக்! ராகுலுக்காக உருகும் தொண்டர்கள்
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: August 11, 2019, 3:00 PM IST
  • Share this:
காங்கிரஸ் கட்சியின் புதிய இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நன்றி ராகுல் காந்தி(ThankYouRahulGandhi) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகினார். 2 மாதங்களுக்கு மேலாக கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்காததால் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #ThankYouRahulGandhi



அந்தக் கூட்டத்தில் புதிய தலைவருக்கு யாருடைய பெயரும் பரிந்துரைக்கப்படாத நிலையில், மீண்டும் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சோனியா காந்தி தலைவராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்தினார் என்று ராகுல் காந்திக்கு அவரது தொண்டர்கள் வாழ்த்து கூறும் வகையில் #ThankYouRahulGandhi என்ற ஹேஷ்டேக்கில் நன்றி தெரிவித்துவருகின்றனர்.

தற்போது, #ThankYouRahulGandhi என்ற ஹேஷ்டேக் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அந்த ஹேஷ்டேக்கின் கீழ், நீங்கள்(ராகுல் காந்தி) கட்சியை சிறப்பாக வழிநடத்தினர்கள். நீங்கள் மனிதத்தை நேசிப்பவர்.. உங்கள் வழியைப் பின்பற்றுவோம் என்று கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.Also see:

First published: August 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading