கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ரேபீஸ் தடுப்பூசியைக் குத்திய மருத்துவமனை
கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ரேபீஸ் தடுப்பூசியைக் குத்திய மருத்துவமனை
வாக்சின்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ளச் சென்ற நபருக்கு வெறிநாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
தானே மாவட்டம் கிழக்கு கல்வா பகுதியில் கோவிட்19 தடுப்பூசி போடச்சென்ற நபர், ராஜ்குமார் யாதவ், வயது 45, இவருக்கு சமீபத்தில் கீழ் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சர்ஜரி ஆகியிருக்கிறதே கொரோனா வாக்சின் போட்டுக் கொள்ளலாமா என்று சந்தேக நிவர்த்திக்காக அவர் கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மருத்துவமனை சென்றார்.
அங்கு இவரை ஒரு இடத்தில் வரிசையில் அமருமாறு கோரியுள்ளனர், இவரும் போய் அமர்ந்தார் இவர் முறை வந்ததும் இவருக்கு இரண்டு கைகளிலும் நர்ஸ் தடுப்பூசிப் போட்டுள்ளார்.
இதனையடுத்து கடும் வலி ஏற்பட்டுள்ளது, ஏன் இரண்டு கைகளிலும் குத்துகிறீர்கள் இது என்ன என்று கேட்டிருக்கிறார், இது வெறிநாய்க்கடிக்கு எதிரான ரேபீஸ் தடுப்பூசி என்று கூறியுள்ளார் அந்த நர்ஸ். இதனையடுத்து தானே நகராட்டி கூடுதல் ஆணையர், சந்தீப் மால்வி கூறும்போது, கோவிட் வாக்சினுக்குப் பதிலாக ரேபீஸ் வாக்சின் போட்ட நர்ஸ் மற்றும் டாக்டர் இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளோம் என்றார்.
அந்த நர்ஸ் வந்து அமர்ந்தவரிடம் எதுவும் விசாரிக்காமல் அவரது மருத்துவ ஆவணங்களயும் பார்க்காமல் ஒரே குத்து குத்தியிருக்கிறார் அதுவும் இரண்டு கைகளிலும், எதுக்கு இரண்டு கைகளிலும் குத்துகிறார் என்ற சந்தேகத்தினால்தான் அவர் கேட்டுள்ளார், தெரியவந்தது.
இதே ரேபீஸ் தடுப்பூசி போட வந்தவருக்கு கொரோனா தடுப்பூசியைப் போட்டு அவர் ஏற்கெனவே கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்டவராக இருந்தால் அல்லது ரேபீஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டு விட்டோம் என்று அவர் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் என்ன ஆகும் என்ற உணர்வே இல்லாமல் அந்த நர்ஸ் செயல்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ராஜ்குமார் யாதவும் தான் போய் நின்ற வரிசை என்ன வரிசை என்பதை விசாரிக்காமலேயே போய் நின்று கடைசியில் ரேபீஸ் தடுப்பூசி குத்து வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.
எப்படியோ கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ரேபீஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ராஜ்குமார் யாதவ் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.