பெண்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் அவலநிலையை எடுத்துக் காட்டும் விதமாக மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் நேற்று ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம், தானேவை அடுத்த ரபோடி என்னும் பகுதியில் காசிநாத் பாண்டுரங் பாட்டீல் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு வயது 76. இந்நிலையில், கடந்த வியாழன்று வழக்கமாக கொடுக்கும் தேநீர் மற்றும் காலைச் சிற்றூண்டியை அவரது மருமகள் வழங்க தாமதமாகியுள்ளது. இதனால், மருமகளை துப்பாக்கியால் காசிநாத் பாண்டுரங் பாட்டீல் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் வயிறு பகுதியில் பலத்த படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " வீட்டில் காலைச் சிற்றூண்டி வழங்கப்படாத காரணத்தினால் இந்த மோதல் சம்பவம் உருவாகியுள்ளது. குற்றவாளி தன்னிடம் இருந்த துப்பாக்கியைப் பயனப்டுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் 42 வயது மதிக்கத்தக்கவர். சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு மருமகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 307 (கொலை முயற்சி) மற்றும் 506 (கிரிமினல் இண்டிமிடேகன்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு வேறு ஏதேனும் தூண்டுதல் இருக்கிறதா என்ற கோணத்திலும் தானே காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
மேலும் படிக்க:
சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு: தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டுக்குள் நடக்கும் இந்த வகையான வன்முறை சம்பவங்களால் ஆண்டுதோறும் 20,000க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
இதையும் படிக்க:
அழகற்ற பெண்கள் கூட திருமணம் செய்ய வரதட்சணை உதவுகிறதாம்... நர்சிங் பாட புத்தகத்தால் சர்ச்சை
திருமணத்துக்கு பின்பு பெண்கள் கணவன் வீட்டிற்குச் செல்லல்,புகுந்த வீட்டில் சுதந்திரமில்லாத தன்மை, வீட்டிலேயே முடக்கி கிடைத்தல் போன்ற காரணிகளால் எல்லாவற்றிற்கும் ஆண்களையே சார்ந்து வாழவேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது, பெண்கள் மீதான குடும்ப வன்முறைக்கு முதல் படிநிலையாகவும் மாறி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.