குஜராத்தில் தாகோர் சமூகத்தில் திருமணம் ஆகாத பெண்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை!

சாதி மாறி திருமணம் செய்யும் பிள்ளைகளின் பெற்றோர்கள் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும்

Web Desk | news18
Updated: July 17, 2019, 4:02 PM IST
குஜராத்தில் தாகோர் சமூகத்தில் திருமணம் ஆகாத பெண்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: July 17, 2019, 4:02 PM IST
குஜராத் மாநிலத்தில் உள்ள தகோர் சமுதாயத்தில் திருமணம் ஆகாத பெண்கள் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்ற புது சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள பன்ஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தகோர் சமூக மக்கள். இந்த சமூகத்தில் செல்ஃபோன் பயன்பாடுக்கு தடை விதித்தது மட்டுமல்லாமல் வேறு சாதியில் பிள்ளைகள் திருமணம் செய்தால் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்ட விதிமுறைக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கனிபென் தகோர் ஆதரவும் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ கூறுகையில், “பெண்களுக்கு செல்ஃபோன் பயன்படுத்தத் தடை விதித்திருப்பதில் தவறு இருப்பதாக ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. தொழில்நுட்பத்திலிருந்து பெண்கள் விலகி படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.


இச்சமூக மக்களுக்கு நடத்தப்பட்ட கூட்டத்தில், சாதி மாறி திருமணம் செய்யும் பிள்ளைகளின் பெற்றோர்கள் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக, திருமண விழாக்களில் டிஜே வரக்கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது, நீண்ட ஊர்வலங்கள் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

இதே சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ-வான அல்பேஷ் தாகோர் கூறுகையில், “பட்டாசு, டிஜே உள்ளிட்ட செலவுகள் திருமண விழாக்களில் தவிர்க்கப்பட வேண்டும் எனக் கூறுவது வரவேற்கத்தக்கது. ஆனால், செல்ஃபோன் பயன்பாட்டுக்கான தடை என்பது ஆண்-பெண் என்ற வேறுபாடு இன்று குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

மேலும் பார்க்க: ஃபேஸ்புக்குக்கு போட்டியாக வருகிறது ‘ஷூலேஸ்’ - புதிய முயற்சியில் கூகுள்!
First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...