கேரளாவுக்கான உதவியை ஏற்க மத்திய அரசு மறுப்பதாக தாய்லாந்து தூதர் தகவல்

கேரளாவுக்கான உதவியை ஏற்க மத்திய அரசு மறுப்பதாக தாய்லாந்து தூதர் தகவல்
இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் சாம்
  • News18
  • Last Updated: August 22, 2018, 2:48 PM IST
  • Share this:
கேரளாவுக்கு வெளிநாடுகள் வழங்கும் நிதியை ஏற்க முடியாது என மத்திய அரசு மறைமுகமான முறையில் தெரிவித்து விட்டதாக இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் சாம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்திருந்தது. அதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு அமீரகம் கேரள மக்களின் இரண்டாவது தாயகமாக திகழ்வதாகவும், கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பை அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டதை போல உணர்வதாகவும் கூறியிருந்தார்.

இதனிடையே அமீரகத்தின் உதவியை மத்திய அரசு ஏற்க மறுத்ததாக தகவல்கள் பரவின. இந்நிலையில் இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் சாம், தாய்லாந்து அரசின் நிதி உதவியை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டதாக ட்விட்டரில் கூறியுள்ளார். வெளிநாடுகளின் நிதி உதவியை ஏற்க முடியாது என இந்திய அரசு கூறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


First published: August 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading