முத்தலாக் தடை மசோதா: மாநிலங்களவையில் இன்று விவாதம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேராத கட்சிகளின் ஒத்துழைப்போடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 30, 2019, 10:20 AM IST
முத்தலாக் தடை மசோதா: மாநிலங்களவையில் இன்று விவாதம்!
மாநிலங்களவை
Web Desk | news18
Updated: July 30, 2019, 10:20 AM IST
முத்தலாக் தடை சட்ட மசோதா மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.

மக்களவையில் கடந்த 25-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு மூலம் மசோதாவை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று தவறாமல் அவைக்கு வர வேண்டும் என பாஜக கொறடா உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாத நிலையில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேராத கட்சிகளின் ஒத்துழைப்போடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... அதிமுக ஆதரவோடு முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்


Loading...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...