மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தயாராக இருந்தால், இந்தியாவிற்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் டெஸ்லா நிறுவனம் சீனாவிலிருந்து கார்களை இறக்குமதி செய்யக்கூடாது என்று கூறி உள்ளார். பலதரப்பு மாநாடு (ரெசினா டயலாக்) ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, இந்தியா ஒரு பெரிய சந்தை ஆகும் மற்றும் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் இங்கே மிகப்பெரிய ஆற்றல் வளம் உள்ளது என்றும் குறிப்பிட்டுளார்.
"டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க், இந்தியாவில் உற்பத்தி செய்யத் தயாராக இருந்தால், எந்தப் பிரச்சனையும் இல்லை ... இந்தியாவுக்கு வாருங்கள், உற்பத்தியைத் தொடங்குங்கள், இந்தியா ஒரு பெரிய சந்தையாகும், அவர்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியும் செய்யலாம்," என்று நிதின் கட்கரி கூறி உள்ளார். அதாவது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆன நிதின் கட்கரி, டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வர வேண்டும், இங்கே வந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று கூறி உள்ளார். "ஆனால் அவர் (எலான் மஸ்க்) சீனாவில் இருந்து உற்பத்தி செய்து இந்தியாவில் விற்க விரும்பினால், அது இந்தியாவுக்கு ஒரு நல்ல முன்மொழிவாக இருக்க முடியாது" என்றும் கட்கரி குறிப்பிட்டார்.
நினைவூட்டும் வண்ணம், கடந்த ஆண்டு, கனரக தொழில்துறை அமைச்சகம், டெஸ்லா நிறுவனத்திடம், வரிச் சலுகைகள் குறித்து பரிசீலிக்கப்படுவதற்கு முன், இந்தியாவில் நிறுவனத்தின் பெயர்போன மின்சார வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்குமாறு கேட்டு கொண்டது.
also read : மாருதி சுசுகி அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 5 நியூ மாடல் கார்கள்!
தற்போது, இன்ஜின் அளவு மற்றும் செலவு, காப்பீடு மற்றும் சரக்கு (CIF) மதிப்பு யுஎஸ்டி 40,000க்கு குறைவாக அல்லது அதற்கு மேல் இருந்தால், முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட்களாக (completely built units - CBUs) இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 60 - 100 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்படுகிறது. .
கடந்த ஆண்டு, சாலை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், இந்த அமெரிக்க நிறுவனம் 40,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் சுங்க மதிப்புள்ள வாகனங்களுக்கு 110 சதவீத இறக்குமதி வரி விதிப்பது ஸீரோ -எமிஷன் (zero-emission) வாகனங்களுக்கு “தடை செய்யப்பட வேண்டும்” என்று கூறியிருந்தது.
சுங்க மதிப்பைப் பொருட்படுத்தாமல் எலெக்ட்ரிக் கார்களுக்கான கட்டணத்தை 40 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும், மின்சார கார்களுக்கான சமூக நல கூடுதல் கட்டணமான (social welfare surcharge) 10 சதவீதத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
also read : எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய கட்டுக்கதைகளும்..உண்மைகளும்!
இந்த மாற்றங்கள் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சுற்றுச்சூழல் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும், விற்பனை, சேவை மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நிறுவனம் குறிப்பிடத்தக்க நேரடி முதலீடுகளை மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும், நிறுவனத்தின் உலகளாவிய நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் இருந்து நிகழ்த்தப்படும் கொள்முதல் கணிசமாக அதிகரிக்கும் என்றும் அந்நிறுவனம் கூறி இருந்தது.
எக்ஸ்-ஃபேக்டரி மதிப்பாக 40,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் (அதாவது சுமார் ரூ. 30.6 லட்சம்) மதிப்பிலான காரை, இந்தியாவை சேர்ந்த எந்தவொரு ஒரிஜினல் எக்யுப்மென்ட் மெனுஃபேக்சரரும் (OEM) உற்பத்தி செய்யவில்லை மற்றும் எக்ஸ்-ஃபேக்டரி மதிப்பாக யுஎஸ்டி 40,000க்கு மேல் வெறும் 1 - 2 % கார்கள் (இவி அல்லது ஐசிஇ) மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன என்பதால் எங்களின் கோரிக்கைகள் இந்திய வாகன சந்தையில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் டெஸ்லா நிறுவனம் வாதிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric car, Elon Musk