காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 போலீஸார் உயிரிழப்பு - அதிரவைக்கும் நேரடி சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

ஸ்ரீநகரில் உள்ள பரபரப்பான பர்சுலா பகத் என்ற இடத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென 2 போலீசாரை சுட்டார்.

 • Share this:
  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 இடங்களில் பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் நடந்த துப்பாக்கிச்சண்டையில், தலா 3 பயங்கரவாதிகள், போலீஸ் என 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

  சோபியான் மாவட்டம் பட்காம் பகுதியில் நேற்றிரவு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டியின்போது திடீரென 3 பயங்கரவாதிகள் சுடத் தொடங்கினர். பதிலுக்கு போலீசார் சுட்டதில் 3 பேரும் உயிரிழந்தனர். இவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

  அவர்களிடம் இருந்து 2 ஏகே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் ஜனிகாம் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்டர் சம்பவத்தில் 2 போலீசார் காயமடைந்தனர்.

  இதில் ஒரு காவலர் உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் அரங்கேறிய சிறிது நேரத்தில் ஸ்ரீநகரில் உள்ள பரபரப்பான பர்சுலா பகத் என்ற இடத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென 2 போலீசாரை சுட்டார்.  இதில் படுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் நேரடி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
  Published by:Vijay R
  First published: