Home /News /national /

விமானத்தில் இருந்து வில்லங்கமாக ஸ்டேட்டஸ் போட்டவர் கைது!

விமானத்தில் இருந்து வில்லங்கமாக ஸ்டேட்டஸ் போட்டவர் கைது!

கைதான இளைஞர்

கைதான இளைஞர்

இளைஞரின் குடும்பத்தை தொடர்பு கொண்டு விசாரித்த பின்னர் அவரை விமானத்தில் பயணிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனால், விமானம் ஒருமணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

  • News18
  • Last Updated :
விமானத்தில் இருந்து கொண்டு முகத்தை மூடியபடி விவகாரமாக ஸ்டேட்டஸ் போட்ட பெங்களூர் இளைஞரை போலீசார் விசாரணைக்கு உள்படுத்தினர்.

கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று காலை 8.15 மணிக்கு மும்பை செல்லும் விமானத்தில் பெங்களூரைச் சேர்ந்த யோக்வேதாந்த் போத்தார் என்ற 21 வயது இளைஞர் இருந்துள்ளார்.

விமானம் கிளம்புவதற்கு முன்னதாக தனது முகத்தை மூடிக்கொண்டு செல்பி எடுத்து 'விமானத்தில் தீவிரவாதி, பெண்ணின் இதயத்தை சிதறடிப்பவன்’ (terrorist on flight, i destroy womes heart) என்ற கேப்ஷனுடன் தனது நண்பர்களுக்கு புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.

பக்கத்து சீட்டில் இருந்த பயணி யோக்வேதாந்தின் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகமடைந்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து, விமானத்துக்குள் நுழைந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சி.ஆர்.பி.எப் போலீசார், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணையில், “தான் ஒரு அப்பாவி என்றும், விமானத்தின் உள்ளே குளிராக இருந்ததால் கர்சீப் முகத்தில் கட்டியிருந்தேன்” என்று யோக்வேதாந்த் பயத்துடன் தெரிவித்துள்ளார்.

பின்னர், யோக்வேதாந்தின் குடும்பத்தை தொடர்பு கொண்டு விசாரித்த பின்னர் அவரை விமானத்தில் பயணிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனால், விமானம் ஒருமணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

Also See..

Published by:Sankar
First published:

Tags: Jet Airways, Kolkata

அடுத்த செய்தி