முகப்பு /செய்தி /இந்தியா / தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது- அமித் ஷா

தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது- அமித் ஷா

அமித் ஷா

அமித் ஷா

தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்வது தீவிரவாதத்தை விட ஆபத்தானது - அமித் ஷா

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

தீவிரவாதத்தைவிட அதற்கு நிதியுதவி செய்வது அதிக ஆபத்தானது என்றும் தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நிதி கிடைப்பதை தடுப்பது தொடர்பாக '' நோ மணி பார் டெரர்'' என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மூன்றாவது மாநாடு இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, தீவிரவாதம் சந்தேகத்திற்கு இடமின்றி, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தலாகும். ஆனால் தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்வது தீவிரவாதத்தை விட ஆபத்தானது என்று நான் நம்புகிறேன், ஏனெனில் தீவிரவாதத்தின் 'வழிகள் மற்றும் முறைகள்' அத்தகைய நிதியிலிருந்து வளர்க்கப்படுகின்றன என்று பேசினார்.

தீவிரவாதத்திற்கு நிதியளிப்பது உலக நாடுகளில் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துகிறது. பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் எந்த மதம், தேசியம் அல்லது குழுவுடன் இணைக்கப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தை எதிர்கொள்ள, பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் சட்ட மற்றும் நிதி அமைப்புகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்," என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

First published:

Tags: Amit Shah, Terrorists