• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • மனித குலத்துக்கு பயங்கரவாதமே மிகப்பெரிய அச்சுறுத்தல் - பிரதமர் மோடி

மனித குலத்துக்கு பயங்கரவாதமே மிகப்பெரிய அச்சுறுத்தல் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பயங்கரவாதத்தை தடுக்க உலக நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய 5 அம்சங்களையும் பிரதமர் மோடி பட்டியலிட்டார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மனித குலத்துக்கு பயங்கரவாதமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக ஜப்பானில் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார்.

  பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் மோடியின் மகத்தான தேர்தல் வெற்றிக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கினார். இந்த வெற்றிக்குத் தகுதியானவர் தான் நீங்கள் என மோடியிடம் டிரம்ப் தெரிவித்தார்.

  இதற்கு பின் ஜி-20 மாநாடு தொடங்கியதும் ஜப்பானிய பிரதமர் ஷின்சு அபே தலைவர்களை பெயர் சொல்லி மேடைக்கு அழைத்தார். பின்னர் அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்கத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் 5ஜி செல்போன் தொழில்நுட்ப நெட்வொர்க்குகளின் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

  டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்த துறையில் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் பணிபுரிய விரும்புகிறோம். இது பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியமானது. இதுபோல் 5ஜி நெட்வொர்க்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம்.

  நியாயமான தடையற்ற பாகுபாடற்ற வர்த்தகத்தின் அவசியத்தை மாநாடு வலியுறுத்தவேண்டும் என ஜப்பான் பிரதமர் ஷின்சு அபே கூறினார்.

  பின்னர், பிரிக்ஸ்   நாடுகளின் கூட்டத்தில் பேசிய மோடி, பயங்கரவாதம் உலகையே அச்சுறுத்தி வருவதாக கூறினார்.

  பயங்கரவாதம் மக்களை மட்டுமன்றி, பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிப்பதாக மோடி கூறினார். ஸ்திரமற்ற பொருளாதார சூழல் குறித்து கவலை தெரிவித்த மோடி,

  இதனால் 1 புள்ளி 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 89 புள்ளி 71 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பற்றாக்குறை நிலவுவதாக கூறினார்.

  பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சர்வதேச அளவில் தற்போதைய பிரச்னைகள், பன்முக பொருளாதார நடைமுறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பது அவசியம்.

  அதன்பிறகு ரஷ்யா - இந்தியா சீனா இடையே முத்தரப்பு கூட்டம் நடந்தது. அதிலும் தடையற்ற வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார். அதில் தீவிரவாதத்துக்கு நிதி தடுப்பு குறித்து மோடி பேசியதாக கோகலே தெரிவித்தார்.  ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்-மோடி சந்திப்பு நடைபெற்றபோது கேமராவை பார்த்து மெர்கல் அதிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

  சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் சவுத், கனடா அதிபர் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்களையும் மோடி சந்தித்தார்.  அப்போது மோடியின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் இருந்து கூடுதலாக 30,000 இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் வருவதற்கு சவுதி அரேபியா அரசு அனுமதியளிப்பதாக உறுதியளித்தது.

  அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தபோது தேர்தலில் தலையிடும் வேலையெல்லாம் கூடாது என செல்லமாக கடிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

  பின்னர் நடைபெற்ற இரவு விருந்தில் மோடியுடன், டிரம்ப் அமர்ந்து உணவருந்தினார். இரு நாடுகள் மத்தியில் வர்த்தக உரசல் நிலவி வந்த நிலையில் இந்த காட்சி இருவரின் நெருக்கத்தை காட்டுவதாக அமைந்தது.

  Also see...

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vinothini Aandisamy
  First published: