உலகின் மிகப் பெரிய சிக்கல் பயங்கரவாதம் - பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆஃப்ரிக்கா நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு காணொலியில் நடைபெற்றது.

உலகின் மிகப் பெரிய சிக்கல் பயங்கரவாதம் - பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடி
  • Share this:
தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதற்கு பொறுப்பேற்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆஃப்ரிக்கா நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு காணொலியில் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை தீவிரவாதம் என்றார். தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளை அதற்கு பொறுப்பேற்க வைப்பதையும், இந்தப் பிரச்னை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கையாளப்படுவதையும் பிரிக்ஸ் நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பொது இடங்களில் கூடுதல், விளையாட்டு நிகழ்வுகள், கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் பரிமாணம், கொரோனாவுக்கு பிறகு முற்றிலும் மாறியிருப்பதை சுட்டிக்காட்டினார். வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் எப்படி தொடங்குவது என்பதே உலகின் முன் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளதாகக் குறிப்பிட்ட மோடி, அதற்கு செயல்பாடுகள் அனைத்தையும் மாற்றவேண்டியது கட்டாயம் எனக் கூறினார்.


இரு உலகப் போர்களுக்குப் பிறகு உலகநாடுகள் தங்களை முழுவதுமாக மீண்டும் கட்டமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதை சுட்டிக்காட்டிய மோடி கொரோனா அதேபோன்றதொரு சூழலை உருவாக்கியிருப்பதாகவும் கூறினார். எதிர்காலத்தில் உறுதிமிக்க கட்டமைப்பை உருவாக்க உலகப் போர் தந்த அனுபவப் பாடங்களை பயன்படுத்தவேண்டும் என்றும் நமக்கு கிட்டியுள்ள வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.,
First published: November 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading