தீவிரவாத தாக்குதல்கள் இலங்கையை சிதைத்துவிடாது: மோடி சூளுரை!

மோடி, சிறிசேனா

இலங்கை சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு விமானநிலையத்தில் மோடியை அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தீவிரவாதத் தாக்குதல்கள் இலங்கையின் உத்வேகத்தைக் குலைத்துவிடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக மாலத்தீவுக்கு சென்றிருந்தார். மாலத்தீவிலிருந்து இன்று காலையில் இலங்கை சென்றடைந்தார். இலங்கை சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு விமானநிலையத்தில் மோடியை அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றார்.

    பின்னர், அதிபர் மாளிகைக்குச் சென்று, மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்துப் பேசினார். பின்னர், எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சேவையும் சந்தித்தார். இலங்கையில் பேசிய பிரதமர் மோடி, ‘தீவிரவாதம் இலங்கையின் உத்வேகத்தை சிதைத்துவிட முடியாது. எனக்கு நம்பிக்கையுள்ளது, இலங்கை மீண்டெழும். கோழைத்தனமான தீவிரவாத தாக்குதல் இலங்கையை சேதப்படுத்திவிட முடியாது. இலங்கைக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published: