• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மகாராஷ்டிரா காங்கிரஸில் டென்ஷன்.. உட்கட்சி பூசலால் மூத்த தலைவர் ராஜினாமா..

மகாராஷ்டிரா காங்கிரஸில் டென்ஷன்.. உட்கட்சி பூசலால் மூத்த தலைவர் ராஜினாமா..

Congress

Congress

காங்கிரஸ் கட்சியில் பூசல் காரணமாக மூத்த தலைவர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Share this:
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவரின் செயல்பாட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் பதவியிலிருந்து சச்சின் சாவந்த் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சி சமீபகாலமாக தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. உள்கட்சி தேர்தல், நிரந்தர தலைவரை தேர்வு செய்யக்கோரி சோனியாவுக்கு 23 தலைவர்கள் கடிதம் எழுதியதில் தொடங்கி, சமீபத்தில் பஞ்சாப் மாநில உட்கட்சி பூசல் என அக்கட்சி நெருக்கடியை சந்தித்து வருகிறது. ராஜஸ்தானிலும் தலைவர்களிடையே பூசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியில் பூசல் காரணமாக மூத்த தலைவர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான நானா படோல், சமீபத்தில் புதிதாக கட்சியில் செய்த நியமனங்களை கண்டித்து, அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளராக இருந்து வந்த சச்சின் சாவந்த் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருந்து வரும் சச்சின் சாவந்த், கடந்த 10 ஆண்டுகளாக மகாராஷ்டிர மாநில தலைமை செய்தித்தொடர்பாளராக இருந்து வருகிறார்.

Also read:  ஐஆர்சிடிசி நிறுவனம் சந்தை மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை!

இவரை துணை செய்தித்தொடர்பாளராக சமீபத்தில் டீபுரோமோட் செய்திருப்பதாகவும், தலைமை செய்தித்தொடர்பாளர் பொறுப்புக்கு தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகி 2016-ல் காங்கிரஸில் இணைந்த அதுல் லோந்தேவுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் தான் அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்து தற்போது சச்சின் ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.

sachin sawant


மேலும், தன்னை பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒரு பதவி வழங்குமாறு சோனியா காந்திக்கு சச்சின் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

Also read: ஆன்லைன் வகுப்பின்போது மொபைல் வெடித்து 5ம் வகுப்பு மாணவன் பலி!

சச்சின் சாவந்த் என்.டி.டி.விக்கு அளித்துள்ள பேட்டியில், ராஜினாமா அல்லது உள்கட்சி பூசல் ஏதும் கிடையாது என கூறியுள்ளார். ஆனால் சோனியாவுக்கு வேறு பதவிவழங்க வேண்டும் என கடிதம் எழுதியது உண்மை தான் என ஒப்புக்கொண்டார்.

மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் நானா படோல் (வயது 56), பாஜகவில் எம்.பியாக இருந்தவர், 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸில் இணைந்தார். பின்னர் இவர் மாநில தலைவர் ஆக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: