• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸின் அரசியல்வாதி அவதாரம்!

டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸின் அரசியல்வாதி அவதாரம்!

Leander Paes

Leander Paes

லியாண்டர் பயஸை கட்சியில் இணைந்ததற்காக வரவேற்ற மம்தா பானர்ஜி, லியாண்டரை தனது இளைய சகோதரர் போன்றவர் என்றார்.

  • Share this:
திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து புதிதாக அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வராகியிருக்கும் மம்தா பானர்ஜி, தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பிற மாநிலங்களிலும் விஸ்தரிக்கும் வகையில் காய் நகர்த்தி வருகிறார். தற்போது அவர் கோவா மாநிலத்தின் மீது கண் வைத்துள்ளார்.

கோவாவில் ஆளும் பாஜகவுக்கு எதிராக தன்னை ஒரு வலுவான தலைவராக அல்லது மாற்று சக்தியாக காட்டிக் கொள்ளும் வகையில் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மம்தாவுக்காக மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் வியூகங்களை வகுத்துத் தந்து திரிணாமுல் காங்கிரஸை வெற்றி பெற வைத்த பிரசாந்த் கிஷோரை கோவாவில் களமிறக்கியுள்ளார்.

Also read: மறைந்தார் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் – ரசிகர்கள் கண்ணீர்..

ஒரே நாளில் மூன்று பிரபலங்கள்:

இதனிடையே கோவாவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சும் வகையில் பிரபலங்களை சேர்த்து வரும் பணி நடைபெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று பிரபலங்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளனர். மூன்று நாட்கள் கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றிருக்கிறது.

இன்று காலை நடிகை நஃபிசா அலி, சமூக செயற்பாட்டாளர் மிருநாளினி தேஷ்பிரபு ஆகியோரும், தற்போது டென்னிஸ் நட்சத்திர லியாண்டர் பயஸும் கோவாவில் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

Also read: ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடே இப்படிப்பட்டவரா? – சக NCB அதிகாரி கூறும் உண்மைகள்!

இளைய சகோதரர் லியாண்டர்:

லியாண்டர் பயஸை கட்சியில் இணைந்ததற்காக வரவேற்ற மம்தா பானர்ஜி, லியாண்டரை தனது இளைய சகோதரர் போன்றவர் என்றார். லியாண்டரை இள வயதாக இருக்கும் போதே எனக்கு தெரியும், நான் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த போது அவர் மிக மிக இள வயது வீரர். அவர் என் கட்சிக்கு வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி என மம்தா பேசினார்.

டெம்பிள் மசூதி சர்ச்:

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆங்கிலத்தில் சுருக்கமாக TMC என அழைப்பார்கள். இதற்கு புதிய அர்த்தத்தை மம்தா பானர்ஜி கற்பித்திருக்கிறார். TMC என்றால் Temple, mosque, church என்பதாகும். நான் மத அடிப்படையில் யாரையும் பிரிக்க முயற்சிக்கவில்லை, கோவாவில் ஓட்டுக்களை பிரிப்பதற்காக வரவில்லை, தேர்தலில் போட்டியை ஏற்படுத்தவே வருகிறேன் என மம்தா கூறினார்.

Also read:   வாகன சோதனையில் வாட்ஸ் அப் சாட்களை செக் செய்யும் போலீசார் – இது சரியா?

இன்று திரிணாமுலில் இணைந்துள்ள நஃபிசா அலி, காங்கிரஸ் கட்சியில் இருந்த போது 2004 பாராளுமன்ற தேர்தலில் தெற்கு கொல்கத்தா தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: