பயிற்சிக்கு வந்த 17 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த டென்னிஸ் பயிற்சியாளர்! அடுத்த அதிர்ச்சி..

பாலியல் வன்புணர்வு - மாதிரி படம்

சில தினங்களுக்கு முன்னதாக டென்னிஸ் தொடர் ஒன்றுக்காக உதய்பூர் சென்ற போது பயிற்சியாளர் தன்னை அங்கும் பாலியல் வன்புணர்வு செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.

  • Share this:
டென்னிஸ் பயிற்சி பெற்று வந்த 17 வயது பெண் ஒருவர், கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சியாளர் தன்னை பல முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் கடந்த சில தினங்களாகவே தமிழகத்தை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்து புகார் அளிக்கலாம் என பிரத்யேக தொலைபேசி எண்கள் தரப்பட்டன. இதனையடுத்து பாலியல் புகார்கள் தினந்தோறும் குவிந்து வருகிறது.

பள்ளி மாணவிகளையும் கடந்து சென்னையில் தடகள பயிற்சியாளர் ஒருவர் மீதும், கராத்தே பயிற்சியாளர் ஒருவர் மீதும் அவர்களிடம் பயிற்சி பெற்ற பெண்கள் புகார் அளித்துள்ளதால் அவர்கள் இருவரும் கைது செய்துள்ளனர்.

இதில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மட்டும் 11 புகார்கள் வந்துள்ளன.

Also Read:   தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளர் கைது!

இந்நிலையில் டென்னிஸ் பயிற்சியாளர் ஒருவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக அவரிடம் பயிற்சிக்கு வந்த 17 வயது வீராங்கனை ஒருவர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளர் கவுரங் நல்வயா என்பவரிடம் 2019ம் ஆண்டு முதல் டென்னிஸ் பயிற்சி பெறத் தொடங்கினார் 17 வயது பெண் ஒருவர்.

பயிற்சிக்கு வருமாறு அழைத்து கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்த 17 வயது பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

சில தினங்களுக்கு முன்னதாக டென்னிஸ் தொடர் ஒன்றுக்காக உதய்பூர் சென்ற போது பயிற்சியாளர் தன்னை அங்கும் பாலியல் வன்புணர்வு செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.

உதய்பூரில் போட்டிகளுக்காக சென்று வீடு திரும்பியதில் இருந்தே அவர் மிகவும் விரக்தியாக காணப்பட்டதால் அவரின் பெற்றோர் என்ன நடந்தது என விசாரித்தபோது பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறி அதிர வைத்திருக்கிறார். இதனையடுத்து ஜோதி நகர் காவல்நிலையம் சென்று பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளித்திருக்கின்றனர் அப்பெண்ணின் பெற்றோர்.

இதனையடுத்து ஜெய்பூரின் சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் இருந்த பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது போஸ்கோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவிகள், பயிற்சிக்கு வரும் பெண்கள் தினந்தோறும் அளித்து வரும் பாலியல் புகார்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: