• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சச்சினுக்கு பாதுகாப்பு குறைப்பு; ஆதித்ய தாக்கரேவுக்கு Z catagory! மகாராஷ்டிரா அரசு அதிரடி

சச்சினுக்கு பாதுகாப்பு குறைப்பு; ஆதித்ய தாக்கரேவுக்கு Z catagory! மகாராஷ்டிரா அரசு அதிரடி

சச்சின் டெண்டுல்கர், ஆதித்ய தாக்கரே

சச்சின் டெண்டுல்கர், ஆதித்ய தாக்கரே

  • News18
  • Last Updated :
  • Share this:
    சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. மாறாக, ஆதித்ய தாக்கரேவுக்கு Z catagoryயாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளநிலையில், மகாராஷ்டிராவில் வாழும் பிரபலமான 90 பேருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது. அதன்படி, பாரத் ரத்னா விருது வென்ற சச்சின் டெண்டுல்கருக்கு இதுவரையில் வழங்கப்பட்ட வந்த X catagory பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

    இருப்பினும், அவருக்கு காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் வோர்லி தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஆதித்ய தாக்கரேவுக்கு வழங்கப்பட்டிருந்த Y+ பாதுகாப்பு, Z catagory-க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் தலைவருக்கு வழங்கப்பட்டுவரும் Z+ பாதுகாப்பு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவருடைய அண்ணன் மகன் அஜித் பவாருக்கு வழங்கப்பட்டு வரும் Z catagory பாதுகாப்பு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா ஹசாரேவுக்கு வழங்கப்ப்படும் வரும் பாதுகாப்பு, Y+ பாதுகாப்பு, Z catagory-க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாய்க் வழங்கப்பட்ட Z+ பாதுகாப்பு X catagory-க்கு குறைக்கப்பட்டுள்ளது.

    1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழங்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வால் நிகாமுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: