ஹோம் /நியூஸ் /இந்தியா /

8 கோடி ரூபாய் நோட்டு கட்டுகளால் அம்மனுக்கு சுவர் அமைத்து அலங்காரம்.. ஆந்திராவில் புதுமையான நவராத்தி கொண்டாட்டம்!

8 கோடி ரூபாய் நோட்டு கட்டுகளால் அம்மனுக்கு சுவர் அமைத்து அலங்காரம்.. ஆந்திராவில் புதுமையான நவராத்தி கொண்டாட்டம்!

சுவாமிக்கு பணத்தால் சுவர் கட்டிய ஆந்திரா பக்தர்கள்

சுவாமிக்கு பணத்தால் சுவர் கட்டிய ஆந்திரா பக்தர்கள்

ரூ.8 கோடி ரொக்கப் பணத்தில் அம்மனுக்கு சுவர் அமைத்து பணத்தில் அலங்காரம் செய்து ஆந்திரா கோயில் ஒன்றில் புதுமையான விதத்தில் நவராத்தியை கொண்டாடுகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Visakhapatnam, India

  ஆண்டுதோறும் புரட்டாசி மாத காலத்தில் நவராத்திரி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள், என்று விமரிசையாகக் கொண்டாடப்படும். முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கு, இரண்டாம் மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவிக்கும், கடைசி மூன்று நாள் சரஸ்வதி தேவிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, நவராத்திரி செப்டம்பர் 26 ஆம் தொடங்கி தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

  நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இந்த பண்டிகை கொண்டாட்டங்கள் தனித்துவமாக கொண்டாடப்படும் நிலையில், ஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள கோயிலில் இந்த பண்டிகையை வித்தியாசமான முறையில் கொண்டாடுகின்றனர். பொதுவாக கோயிலில் சுவாமி சிலைகளை தங்கத்தில் செய்து ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம். ஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள வாசவி கன்யகா பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு நவராத்திரி காலத்தில் ரூ.8 கோடி ரொக்கத்தில் அலங்காரம் செய்து வழிபடு செய்து வருகின்றனர். கோயில் மூல விக்ரகமான அம்மன் சிலையை சுற்றி ரூ.2,000, ரூ.500, ரூ.100 எனத் தொடங்கி கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளில் சுவர் எழுப்பி அடுக்கி வைத்துள்ளனர்.

  இவ்வாறு ரூ.8 கோடி ரொக்கத்தில் இந்த கோயில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொது மக்களின் நன்கொடையால் வழங்கப்பட்டுள்ளதால், நவராத்திரி பூஜை முடிந்ததும் இதை கோயில் நிர்வாகம் திருப்பி தந்துவிடுவார்கள். கோயில் நிர்வாகம் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளாது.

  இதையும் படிங்க: தெய்வீக வாக்கு: இந்த ராசியினர்களுக்கு இன்று (1 அக்டோபர் 2022) ஒரு புதிய வருமான ஆதாரம் வந்து சேரும்.!

  மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள வாசவி கன்யாகா கோயில் 135 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும். வருடா வருடம் நவராத்திரி கால ரொக்க அலங்கார வழிபாட்டில் பக்தர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் பங்கேற்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Andhra Pradesh, Navaratri, Vishakapatnam