• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம்: வெறிச்சோடிப்போன புதுச்சேரி..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம்: வெறிச்சோடிப்போன புதுச்சேரி..!

அக்னி வெயிலின் உக்கிரத்தினால் ஒரு சவாரி கூட வருவதில்லை என கவலையுடன் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தெரிவிக்கிறார்.

  • Share this:
கோடை வெயிலுடன் அக்னி நட்சத்திரமும் சேர்ந்துள்ளதால் புதுச்சேரியில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மதிய வேளையில் வீதியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக அங்காடி சாலைகள், நகர்ப்புற சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. ஏற்கனவே கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் புதுச்சேரியில் மக்கள் அதிக அளவில் வெளியே வந்தனர். ஆனால் இரண்டு நாட்களாய் வெயில் கடுமையாக வாட்டி வதைப்பதால் மதியம் 1 மணிக்குப் பிறகு மக்கள் வெளியே வருவதில்லை.

வெயில் கடுமையாக இருந்தாலும் துப்புரவுப் பணியைத் தொடர்வதாகவும் இரவில் வெயிலின் தாக்கம் இருப்பதாகவும் கூறுகிறார் துப்புரவுப் பணியாளர் அலமேலு. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு இப்பதான் மக்கள் வெளியேவரத் துவங்கினார்கள். ஆனால், அக்னி வெயிலின் உக்கிரத்தினால் ஒரு சவாரி கூட வருவதில்லை என கவலையுடன் ஆட்டோ ஓட்டுநர் கலியமூர்த்தி தெரிவிக்கிறார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: