முகப்பு /செய்தி /இந்தியா / தெலுங்கானாவில் பெருமழை.. பிற நாடுகளின் சதியாக இருக்கலாம் - சந்திரசேகர் ராவ் குற்றச்சாட்டு

தெலுங்கானாவில் பெருமழை.. பிற நாடுகளின் சதியாக இருக்கலாம் - சந்திரசேகர் ராவ் குற்றச்சாட்டு

சந்திரசேகர் ராவ்

சந்திரசேகர் ராவ்

மேகவெடிப்பால் பெய்து வரும் மழையால், பத்ராசலம் என்ற ஊர் தற்போது வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. 53 அடி வரை மூழ்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தெலுங்கானாவில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால், கோதாவரி ஆற்றின் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று பார்வையிட்டார்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால், பத்ராசலம் என்ற ஊர் தற்போது வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. 53 அடி வரை மூழ்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 70 அடி வரை அந்த பகுதி நீரால் மூழ்கியது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், “இந்த மேகவெடிப்பு என்பது புது நிகழ்வாக உள்ளது,  பிற நாடுகளின் சதியாகவும் இது இருக்கலாம் என எங்களுக்கு செய்தி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதற்கு முன்னர் காஷ்மீர் பகுதியில் இதுபோல மேகவெடிப்பு உருவானது, அதற்கு பின் உத்திரகாண்ட்டில் நடந்தது, தற்போது தெலுன்கானாவில் நடக்கிறது” என கூறினார்.

மேலும் அவர் வெள்ள பகுதிகளை பார்வையிட்ட பின், கோதாவரி ஆற்றில், கங்கைக்கு ‘சாந்தி பூஜை’ செய்து வழிபட்டார். பின்னர் அவர், எதுர்நகரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அங்குள்ள மக்களுக்கு தேவையான உணவுகளும், மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்ய தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரிஷ் ராவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெலுங்கானா முதலமைச்சர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

First published:

Tags: Chandrasekar rao, Telangana